நாளைய தினம் 27-4-2025 சித்திரை மாதத்தில் வந்திருக்கும் அமாவாசை தினம். இந்த நாளில் நம்முடைய முன்னோர்களின் ஆசி, இந்த பிரபஞ்சத்தில் பரிபூரணமாக நிரம்பி இருக்கும். அது மட்டுமல்லாமல், அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும். நம்முடைய வீடும் நம்முடைய மனதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
இந்த சமயத்தில் உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லிப் பாருங்கள். நிச்சயம் அந்த வேண்டுதலானது கூடிய விரைவில் பலிக்கும். அந்த வகையில் உங்களுடைய பணக்கஷ்டம் தீருவதற்கு ஒரு சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வெறும் தண்ணீரை பணம் தரும் தீர்த்தமாக மாற்றி, அந்த தீர்த்தத்தை பருக உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீரும். வருமானம் பெருகும். இப்படி சொன்னால் அது உங்களுக்கு நம்பிக்கை தராது அல்லவா. ஆனா இத நீங்க ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் சக்சஸ் ஆகும். நிச்சயமாக ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீரை, தீர்த்தமாக மாற்றும் சக்தி இருக்கிறது. நீங்களே இதை சோதித்து பார்க்கலாம்.
நாளை அமாவாசை திதி. நாளை காலை இந்த பரிகாரத்தை செய்ய முடிந்தால் செய்யலாம். இல்லையென்றால் மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் முன்பு சுத்தமான ஒரு கண்ணாடி டம்ளரில், சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே உங்களுடைய வலது உள்ளங்கையை வைத்து மூடி பணம் தரும் மகாலட்சுமியின் இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.
பணம் தரும் மந்திரம்
ஓம் ஸ்ரீம் ப்ரிசி நமஹ
அவசர அவசரமாக கடகடன்னு மந்திரத்தை உச்சரிக்க கூடாது. நிதானமாக பொறுமையாக இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு மகாலட்சுமியை குலதெய்வத்தை நினைத்து இந்த தண்ணீரை குடித்து பாருங்கள். உங்களுக்கு இந்த தண்ணீர் வெறும் தண்ணீர் போல இருக்காது. நிச்சயம் தீர்த்தத்தை பருகுவது போல ஒரு உணர்வு தோன்றும். இந்த ஒரு டம்ளர் தண்ணீரையும் நீங்கள் முழுசாக குடித்து விட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணத்தடைகள் விலகும்.
எப்படி இந்த தண்ணீரை குடிக்கும்போது நிறைய வேலை செய்ய வேண்டும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு அதிகரிக்கும். பிறகு வேகமாக பணவரவு உங்களை நோக்கி படையெடுக்கும்.
நமக்குள் நேர்மறை ஆற்றல் வர வர, தானாக பணவரவு அதிகரிக்க துவங்கிவிடும். முதலில் நமக்கு வருமானம் அதிகரிக்கும். நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்று நாம் நம்ப வேண்டும். முழு நம்பிக்கையோடு மகாலட்சுமியை வழிபட, மகாலட்சுமி நம்மிடம் நிரந்தரமாக தங்கத் தொடங்கி விடுவாள். இதுதான் இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை.
இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்தால் முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் ஆசையும் நமக்கு சேர்த்து கிடைக்கும். அதற்காகத்தான் இந்த பரிகாரத்தை இப்போது உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். நாளை தினம் காலை 6:00 மணி அல்லது மாலை 6:00 மணி இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். இந்த மந்திரம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளபடி அமையும்.
இதையும் படிக்கலாமே: பித்ரு சாபம் நீக்கும் எளிய மந்திரம்
நாளை மட்டும் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாளை தொடங்கி இந்த பரிகாரத்தை, இந்த தீர்த்தத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர நிச்சயமாக வாழ்நாளில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.