
கடன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யாரும் கடனை வாங்குவது கிடையாது. தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் தங்களுடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்காத பட்சத்தில் வேறு வழியே இல்லாமல் தான் பிறரிடம் இருந்து கடனை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அதில் எந்த பலனும் ஏற்படவில்லை என்னும் பட்சத்தில் செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய பெருமாளை வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி சனிக்கிழமை உடன் ஏகாதசியும் சேர்ந்து வரக்கூடிய நாள் அன்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது மிகவும் பலனை தரும். 11 வருடங்களுக்கு பிறகு வரக்கூடிய இந்த அற்புதமான நாளன்று நாம் பெருமாளை வழிபாடு செய்வதோடு இந்த எளிமையான பரிகாரத்தையும் செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய கடன்கள் விரைவிலேயே அடையும் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் கவலைப்படாமல் அடுத்த வாரம் வரக்கூடிய புரட்டாசி சனிக்கிழமையிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை புரட்டாசி சனிக்கிழமை அன்று அதுவும் சனி ஹோரையும் தான் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பித்தளை சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பித்தளையில் சொம்பு இல்லாத பட்சத்தில் வெள்ளி சொம்பை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறிய அளவில் இருக்கக்கூடிய மண்பானையாக இருந்தாலும் அதையும் எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது இதை சுத்தம் செய்து இதற்கு வெளிப்புறத்தில் நாமம் போட வேண்டும். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதை மஞ்சளில் நனைத்து நன்றாக காய வைத்து அந்த துணியை செம்பின் வாயில் கட்டிவிட வேண்டும். நடுவில் ஒரு சிறிய ஓட்டையை போட்டு உண்டியலாக தயார் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த உண்டியலுக்குள் முக்கியமான மூன்று பொருட்களையும் நாம் போட வேண்டும். இந்த பொருட்களை போடும் பொழுது பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு பெருமாளின் நாமங்களை கூறிக்கொண்டு போடவேண்டும். அப்படி பெருமாளின் நாமங்கள் தெரியாதவர்கள் கோவிந்தா என்ற நாமத்தை கூறிக் கொண்டு கூட போடலாம். முதலில் இந்த உண்டியலில் பச்சை கற்பூரத்தை போட வேண்டும். அடுத்ததாக இந்த உண்டியலில் வெந்தயத்தை போட வேண்டும். மூன்றாவதாக இந்த உண்டியலில் 11 ரூபாயை போட வேண்டும்.
பிறகு என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும். அதற்கு நீ தான் நல்ல வழியை காட்ட வேண்டும் என்று பெருமாளிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் உண்டியலில் பணத்தை போட்டுக் கொண்டே வரலாம். அவ்வாறு போடும்பொழுது கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டு போடவேண்டும்.
சுத்தமாக இருக்கும் பொழுது மட்டும்தான் இந்த உண்டியலில் பணத்தை போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்டியல் பெருமாளின் முன்பாக எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கட்டும். எப்பொழுது நாம் திருப்பதிக்கு செல்கிறோமோ அல்லது திருப்பதிக்கு இணையான பெருமாள் ஆலயத்திற்கு செல்கிறோமோ அப்பொழுது இந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த ஆலய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:நவராத்திரி கலசம் கட்டும் முறை
மிகவும் சக்தி வாய்ந்த இந்த உண்டியல் பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள்ளேயே கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ பெருமாள் அருள் புரிவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.