- Advertisement -
- Advertisement -

ஒருவர் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது தன்னுடைய பிற்கால சங்கதியினர் கஷ்டப்படக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அதனால் தான் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு சிறிய தொகையாவது சேமிப்பாக சேர்த்து வைப்பார்கள். எவ்வளவு கோடி கணக்கில் பணத்தை சம்பாதித்தாலும் ஒரு சிலரால் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் சம்பாதித்த பணமானது வீண் விரயமாவது தான். இந்த வீண் விரயத்தை தவிர்த்து பணத்தை சேமிக்கவும் அதே போல் எப்பொழுதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சேமிப்பு உயர உண்டியல் பரிகாரம்

பணவரவை அதிகரிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தெய்வங்களாக திகழ்ந்தவர்கள் மகாலட்சுமியும் குபேரம்தான். இவர்கள் இருவரையும் மனதார நினைத்துக் கொண்டு நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலில் வெற்றிகள் உண்டாகும். அந்த செயலால் பணவரவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் தினமும் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண் உண்டியலை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் நம்முடைய சேமிப்பை உயர்த்தும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு மண் உண்டியல் வேண்டும். மண்ணால் செய்யப்பட்ட உண்டியல் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கக்கூடிய நாள் சந்திராஷ்டமம் இல்லாத சுபமுகூர்த்த நாளாக இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மண் உண்டியலை வாங்கி வாருங்கள். அந்த மண் உண்டியலை சுத்தி மஞ்சள் தடவி அதற்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த மண் உண்டியலின் உள்ளே மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களான கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்றவற்றை போட்டுக் கொள்ளுங்கள். அதேபோல் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்து விட்டு பெருமாளின் ஆலயத்தில் தரக்கூடிய துளசி இலையையும் வாங்கி வந்து இந்த உண்டியலில் போட்டு விட வேண்டும்.

இந்த உண்டியலை வீட்டின் தென்மேற்கு மூலையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வைக்க வேண்டும். தினமும் குளிகை நேரம் என்பது வரும். அந்த நேரத்தில் தங்களால் இயன்ற ஒரு தொகையை அது பத்து ரூபாயாகவும் இருக்கலாம், 20 ரூபாயாகவும் இருக்கலாம் அதை எடுத்து உண்டியலில் போட வேண்டும். அவ்வாறு போடும் பொழுது “ஓம் நமோ மகாலட்சுமியே நமஹ” “ஓம் நமோ குபேரரே நமஹ” என்று மகாலட்சுமி தாயாரையும் குபேரரையும் மனதார நினைத்துக் கொண்டு இந்த பணம் சேமிப்பாக உயர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு போட வேண்டும். குளிகை நேரத்தை பயன்படுத்த இயலவில்லை என்பவர்கள் சாதாரணமாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போடலாம். எமகண்ட ராகுகால நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் ஒரு நாள் கூட விடாமல் யார் ஒருவர் இந்த உண்டியலில் பணத்தை சேர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பான முறையில் சேமிப்பு உயரும். அதோடு மட்டுமல்லாமல் வீண் விரையமும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அவர்கள் கையில் பணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு இந்த உண்டியலில் இருக்கக்கூடிய தொகையை திருப்பதியில் இருக்கக்கூடிய பெருமாளின் உண்டியலில் சேர்க்கலாம். திருப்பதிக்கு செல்ல இயலாது என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அந்த உண்டியலில் சேர்ப்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் பிரதோஷ பரிகாரம்

எளிமையான இந்த உண்டியல் பரிகாரத்தை முழு மனதோடு தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்பவர்களுக்கு வீண் விரயம் குறையும் சேமிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -