- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க சரஸ்வதி பூஜை வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு பெற்றோர்களும் காணக்கூடிய கனவு என்ன. தங்களுடைய பிள்ளைகள் அறிவாளிகளாக, திறமைசாலிகளாக இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர வேண்டும். கைநிறைய சம்பாதிக்க வேண்டும் இதுதான் பெற்றவர்களின் ஆசை கனவு எல்லாமே. உங்கள் பிள்ளைகளுக்கு மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் கிடைக்க வேண்டும்.

சரஸ்வதி கடாட்சத்தை பெறுவதற்கு உகந்த நாள், சரஸ்வதி பூஜை. இந்த நாளில் உங்களுடைய குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் ஆசி கிடைக்க செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சரஸ்வதி பூஜை வழிபாடு

இன்று 11-10-2204 சரஸ்வதி பூஜை. வழக்கம்போல உங்கள் பிள்ளைகளுடைய புத்தகங்களுக்கு சந்தன குங்குமம் வைத்து, அலங்கரித்து பூ வைத்து, பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் முன்பு வைத்து விடுங்கள். வீட்டில் பயன்படுத்தும் ஆயுதங்கள், சமையல் அறையில் பயன்படுத்தும் ஆயுதங்கள், நீங்கள் தொழில் செய்ய பயன்படுத்தும் பொருட்களையும், அலங்கரித்து விடுவீர்கள். பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரொம்பவும் பழைய தயிராக இருக்கக் கூடாது. புதுசாக உரை போட்ட தயிர். அப்படி இல்லை என்றால் கடையிலிருந்து பசு தயிர் வாங்கி அதை கிண்ணத்தில் ஊற்றி சரஸ்வதி தேவிக்கு நெய்வேதியமாக வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் சுண்டல் அவல்பொரி கடலை இதோடு சேர்த்து தயிரும் நெய்வேதியமாக இருக்கட்டும்.

- Advertisement -

உங்களுடைய பிள்ளைகள் சாப்பிடுவார்கள் என்றால் அந்த தயிருடன் கொஞ்சமாக சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு வழக்கம்போல விளக்கு ஏற்றி தீப தூப ஆராதனை காண்பித்து விட்டு பிரார்த்தனைகளை வைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த நெய்வேதியம் இப்போது சரஸ்வதி தேவியின் அருள் ஆசியோடு பிரசாதமாக மாறியிருக்கிறது.

பூஜையை முடித்த உடனேயே இந்த தயிரை உங்களுடைய பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும். சில பிள்ளைகள் இதை சாப்பிட்டு கொள்வார்கள். சில பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள். அப்படியென்னும் போது இதை சாதத்தோடு கலந்து, அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருட்களோடு கலந்து அவர்களுக்கு சாப்பிட கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் ஒரு புது வேலைக்கு செல்லும் போது, அல்லது முக்கியமான விஷயங்களுக்கு செல்லும்போது, தேர்வுக்கு செல்லும் போது தயிரோடு சர்க்கரை கலந்து கொடுப்பார்கள். இதை சாப்பிட்டால் நீ நன்றாக தேர்வு எழுதுவாய் என்று சொல்லுவார்கள். சரஸ்வதி ஆசிர்வாதம் பெற்ற அந்த தயிருக்கு அறிவியல் ரீதியாகவும் சில சக்திகள் இருக்கிறது.

நம்முடைய வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை சரி செய்து, நம்முடைய மூளையை சீராக இயக்கக்கூடிய தன்மை தயிறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீங்கள் அறிவியல் ரீதியாக இன்று செய்தாலும் சரி, ஆன்மீக ரீதியாக செய்தாலும் சரி, பிள்ளைகளுக்கு இன்று தயிரை சாப்பிட கொடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய ஆரோக்கியமும் சீராகவும் அறிவும் சீராகும்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான வழிபாட்டை சரஸ்வதி தேவிக்கு மனப்பூர்வமாக செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -