- Advertisement -

கொத்தோடு பிரச்சனைகள் தீர கொத்தவரங்காய் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் கவலைகளையும் பிரச்சனைகளையும் கேட்டால் அத்தனை சோக தரமானதாக இருக்கும். பொது வெளியில் என்ன தான் சந்தோஷமாக பேசி தெரிந்தாலும் மனதிற்குள் எண்ணற்ற சோகங்களையும் துக்கங்களையும் சுமந்தபடி தான் இருக்கிறார்கள். இது மனிதருக்கும் மனிதர் மாறுபட்டுக் கொண்டு இருக்குமே தவிர, பிரச்சனை இல்லாத மனிதர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்க போராடியே நம்முடைய வாழ்நாள் முழுவதும் வீணாகி போய் விடுகிறது. இது போன்ற துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஒரே நாளில் நீங்கி இன்பமாய் வாழ செய்யக் கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர பரிகாரம்

முதலில் இந்த பரிகாரத்தை எது எதற்கெல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் கணவன் மனைவி சண்டை, கடன் பிரச்சனை, மற்றவர்களுடன், பிள்ளைகளுடான பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் அல்லது நம்முடைய மேல் அதிகாரிகள் உடன் மனஸ்தாபம் இப்படி உங்களுக்கு துன்பம் தரக்கூடிய எந்த பிரச்சனையாயினும் இந்த பரிகாரத்தை செய்யும் போது சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு கொத்தவரங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு நாம் வீட்டில் வாங்கி வைத்த காயை பயன்படுத்தக் கூடாது பரிகாரத்தை செய்யும் அன்று கடையில் வாங்கித் தான் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் வரவேற்பறையில் நீங்கள் நின்று கொண்டு இந்த கொத்தவரங்காய் ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு உங்களின் வலது புறத்தில் இருந்து இடது புறமாக ஒன்பது முறை சுற்றி வேண்டும். அப்படி சுற்றும் பொது உங்கள் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் என ஏதாவது ஒரு அம்மனை மனதார நினைத்து வேண்டி கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த காயை உங்கள் இரண்டு கைகளாலும் முறித்து உடைக்க வேண்டும். அதன் பிறகு ஓடும் நேரில் விட்டு விட வேண்டும். வேறு எங்கும் போடக் கூடாது.

இதை தண்ணீரில் போடும் போது எனக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் இத்தோடு தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு போடுங்கள். உங்கள் வீட்டின் அருகில் நீர்நிலைகள் இல்லை என்ற வீட்டிலே ஒரு பாக்கெட் வைத்து அதில் தண்ணீரை நிரப்பி இது போல காயை அது முறித்துப் போட்டு விட்டு அதன் பிறகு கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற

இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே போதும் நீங்கள் தீர்க்க நினைத்த பிரச்சனைகள் எளிதில் தீருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -
Published by