- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற

அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற

- Advertisement -

வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். ஒன்று அவர்கள் துவங்கும் எந்த செயலும் தடை என்று நல்லபடியாக நடக்க வேண்டும். மற்றொன்று துவங்கும் தொழில் செய்யும் வேலை எதுவாக இருப்பினும் அதில் நல்ல வருமானம் வந்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

இவை சரியாக அமைந்து விட்டாலே இந்த குடும்பத்தில் உள்ள பாதி பிரச்சனைகள் காணாமல் போய் விடும். இவை இரண்டும் நமக்கு ஒரு சேர கிடைக்க வேண்டுமெனில் அதற்கு சில வழிபாட்டு முறைகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் பெருக காரிய தடை விலக வழிபாடு

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாக ஒவ்வொரு பொருள்கள் சொல்லப்படுகிறது. அந்த வகையில் விநாயகருக்கு உகந்தாக அருகம்புல்லும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்ததாக துளசியும் சொல்லப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

வீட்டில் துளசி மாடம் இருந்தால் இதை அங்கு செய்யலாம் அல்லது பூஜையறையில் ஒரு தட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் அருகம் புல்லை பரப்பி வைத்து விட்டு நடுவில் துளசி இலையை வையுங்கள். ஒரு வேளை துளசி மாடத்தில் செய்வது என்றால் துளசி மாடத்தை சுற்றி அருகம்புல் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்கள் கையில் பிரம்ம தானியம் என்று சொல்லப்படும் நெல்மணிகளையும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பிரம்ம தானியம் என்பது எத்தனை முறை நாம் புதைத்தாலும் உயிர்ப்பிக்கும் தன்மை கொண்டது. அத்துடன் சேர்ந்து மங்களப் பொருளாகவும் செல்வத்தை ஈர்க்கும் தன்மையை கொண்ட கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நாம் இந்த துளசிக்கும் அருகம்புல்லுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அப்படி அர்ச்சனை செய்யும் வேலையில் விநாயகர் ஸ்தோத்திரங்கள் 108 முறையும் மகாலட்சுமி ஸ்தோத்திரம் 108 முறையும் சொல்ல வேண்டும். இதில் உங்களுக்கு எந்த மந்திரங்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள். ஒரு வேளை உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் ஓம் கணபதியே நமக என்று 108 முறையும், ஓம் மகாலட்சுமி தாயே போற்றி என்று 108 முறையும் சொல்லுங்கள்.

இந்த முறையில் நீங்கள் பூஜை செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தையும் விநாயகர் தகர்த்தெறிந்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வர். அது மட்டும் இன்றி உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை தரித்திரம் போன்றவற்றை நீக்கி செல்வ செழிப்புடன் வாழக் கூடிய யோகத்தை மகாலட்சுமி தாயார் தருவார்.

இதையும் படிக்கலாமே:

சற்று முன்