
நம்முடைய குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உரிய நாளாக தான் அமாவாசை நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட அமாவாசை நாளை ஒவ்வொருவரும் தவறவிடாமல் தங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை இந்த வழிபாட்டை தவறவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு. மேலும் நாம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்யாமல் இருக்கும் பொழுது அது பித்ரு தோஷத்திற்கும் வழிவகுக்கும்.
இதனால் குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் என்பது உண்டாகும். குடும்பத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. தொட்ட காரியங்களில் தடைகள் வந்து கொண்டே இருக்கும். சுப காரிய தடைகளும் உண்டாகும். இப்படிப்பட்ட தடைகளை நீக்குவதற்கு முன்னோர்களின் மனதை குளிர வைக்க வேண்டும். முன்னோர்களின் மனதை குளிர வைத்து விட்டாலே பித்ரு தோஷம் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. அப்படி முன்னோர்களின் மனதை குளிர வைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு தண்ணீர் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இன்று ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் ஆவணி அமாவாசை நாள். இன்றைய நாள் பலவிதமான சிறப்பு நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கண்டிப்பான முறையில் நாம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும். முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்களும், முன்னோர்களுக்காக படையல் இட்டு வழிபாடு செய்ய இயலாதவர்களும், முன்னோர்களுக்குரிய பித்ரு கடனை தீர்க்க இயலாதவர்களும் இன்றைய நாளில் இரவில் தண்ணீரை இந்த முறையில் வைத்தாலே போதும். முன்னோர்களின் மனம் குளிரும் பித்ரு தோஷமும் முற்றிலும் நீங்கும்.
இந்த பரிகாரத்தை இரவு அமாவாசை வரக்கூடிய நாளில் தான் செய்ய வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு பெரிதும் எந்தவித பொருட்செலவும் ஏற்படாது. ஒரு சொம்பு அல்லது டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை பிடிக்க வேண்டும். பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை போட வேண்டும். இந்த தண்ணீரை நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைக்க வேண்டும். எப்பொழுது நாம் நிலைவாசல் கதவை சாற்றி உறங்கச் செல்கிறோமோ அப்பொழுது இந்த தண்ணீரை வெளியே வைத்து விட்டு கதவை சாற்றிவிட்டு உறங்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து நிலை வாசல் கதவை திறக்கும் பொழுது இந்த தண்ணீரை எடுத்து செடிகளில் ஊற்றி விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம் வீட்டை தேடி வரக்கூடிய முன்னோர்கள் அந்த தண்ணீரை அருந்தி மனம் குளிர்ந்து விடுவார்கள் என்றும் அதன் மூலம் பித்ரு தோஷம் முற்றிலும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்ற முழு நம்பிக்கையோடு இந்த தண்ணீரை நாம் வைப்பதன் மூலம் அவர்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: பிறந்த மாதம் தெய்வ வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தண்ணீர் பரிகாரத்தை ஒவ்வொருவரும் முழு நம்பிக்கையோடு தங்களுடைய முன்னோர்களை நினைத்து செய்வதன் மூலம் முன்னோர்களின் அருளையும் ஆசியையும் பெற முடியும். அதன் மூலம் பித்ரு தோஷம் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.