- Advertisement -

மறைந்த நமது முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர். வேத சாஸ்திரப்படி ஒருவர் மறைந்த முன்னோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முறையான திதி,, தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்ய விடில் அவர்களுக்கு பித்ரு சாபம் ஏற்படுவதாக கூறுகிறது. இந்த பித்ரு சாபம் பெற்றிருப்பவர்கள் வாழ்வில் பலவிதமான இன்னல்களை அனுபவிப்பார்கள்.

ஒருவருக்கு பித்ரு சாபம் இருக்கிறதா? இல்லையா என்பதை அந்த நபரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தாலே தெரியும் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தங்களுக்கு பித்ரு சாபம் ஏற்பட்டு அதனால் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய பித்ரு சாப பரிகாரங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பித்ரு சாபம் விலக பரிகாரம்

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பித்ரு சாபம் நீங்கி, வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு சென்று, கோயிலில் இருக்கின்ற விநாயகர், கொடிமரம், நவகிரகம், நந்தி, உற்சவர், மூலவர், இதர தெய்வங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் ஒரு மண் அகல் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

அதன் பிறகு கோவிலில் இருக்கின்ற சிவபெருமானையும் – அம்பாளையும் வழிபாடு செய்து, பித்ரு சாபம் இருப்பவர்கள், தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனை தரக்கூடிய அதிக பொருட்செலவில்லாத ஒரு எளிய பரிகாரமாகும்.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை தினத்தன்று அருகில் உள்ள கோயிலில் இருக்கின்ற கோமடத்தில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை மற்றும் அரிசி, வெள்ளம் கலந்து உணவாக கொடுக்க வேண்டும். அகத்திக் கீரை, அரிசி வெள்ளம் கொடுக்க முடியாதவர்கள், இரண்டு வாழை பழங்களையாவது கோமடத்தில் இருக்கின்ற பசு மாடுகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் பசுக்களுக்கோ உண்ணக் கொடுப்பதும் ஜாதகத்தில் இருக்கின்ற பித்ரு சாபம் நீங்கி நற்பலனை தர செய்யும் ஒரு ஆற்றல் வாய்ந்த பரிகாரமாக உள்ளது.

மகாளய பட்சம் எனப்படும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற பரணி நட்சத்திர தினத்தன்று மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதாலும் பித்ரு சாபங்கள் நீங்கும். அதேபோல் சித்திரை மாதத்தில் வருகின்ற அட்சய திருதியை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதாலும் தங்களுக்கும் தங்கள் பரம்பரையில் இருக்கும் ஏற்பட்ட பித்ரு சாபங்கள் நீங்கும்.

- Advertisement -

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பித்ரு சாபங்கள் (Pitru sabam pariharam in Tamil) நீங்கி, வாழ்வில் நன்மைகள் ஏற்பட ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று வன நரசிம்மர் கோயிலுக்கு சென்று நரசிம்மருக்கும், தாயாருக்கும் துளசி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கல் உப்பு பரிகாரம்

நரசிம்மர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டிலேயே ஒரு சிறிய அளவில் லஷ்மி நரசிம்மர் படத்திற்கு பொட்டு வைத்து, வாசமிக்க மலர்களை சாற்றி, ஒரு டம்ளரில் காய்ச்சாத பசும்பால் அல்லது வெள்ளம், சுக்கு கலந்த பானகம் நைவேத்தியமாக வைத்து, நரசிம்மர் பிரபத்தி ஸ்லோக மந்திரம் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -