கடலிலிருந்து மனிதர்களுக்கு கிடைக்கின்ற மிக அற்புதமான பொருட்களில் ஒன்று உப்பு. உப்பில் கல் உப்பு என்பது சபையில் மட்டுமல்லாது, ஆன்மீக ரீதியான விடயங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கல் உப்பு பயன்படுத்தி, நமக்கு நன்மை தரும் வகையில் செய்து கொள்ளக் கூடிய சில எளிய கலப்பு பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
கல் உப்பு கொண்டு செய்யப்படும் பரிகாரம்
உங்கள் குடும்பத்தில் எவரேனும் அடிக்கடி உடல் நல பாதிப்புகளுக்கு உட்படுபவராக இருந்தால், அந்த நபர் தூங்கும் போது அவர்களின் படுக்கையறையில் அவர்களின் தலைமாட்டிற்கு பக்கத்தில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிறிதளவு கல் உப்பு போட்டு வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் அந்த கல்லுப்பு அந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் நோய்களை உள்வாங்கி, வெகு விரைவில் அவர்களை குணமடைய செய்யும் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் குணமடையும் வரை கண்ணாடி கிண்ணத்தில் வைக்கின்ற கல் உப்பு கரைந்து போகும் பட்சத்தில், அதை வெளியில் வீசி புதிய கல்லுப்பை அந்த கண்ணாடி கிண்ணத்தில் போட்டு நிரப்பி வைக்க வேண்டும்.
தங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று திரும்பும் பொழுது உடலளவிலும், மனதரவிலும் சோர்வு ஏற்பட்டாலோ அல்லது தங்களுக்கு எதிர்மறையான உணர்வுகளும், எண்ணங்களும் எழும் பட்சத்தில் தினமும் காலையில் குளிக்கின்ற பொழுது, அந்த நீரில் சிறிதளவு கல்லுப்பை போட்டு நன்கு கலந்து அந்த தண்ணீரைக் ஊற்றி குளித்துவிட்டு செல்வதால் வெளியில் இருக்கின்ற எதிர்மறைக ஆற்றல்கள் உங்களின் உடல் மனம் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
தங்களின் வீடுகளில் எப்பொழுதும் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டு அதனால் மன நிம்மதியை இழப்பவர்கள். சிறிய அளவில் இருக்கின்ற ஒரு சிவப்பு நிற துணியில் சிறிதளவு கல்லுப்பு போட்டு, அதை முடித்து போட்டு கட்டி, உங்கள் வீட்டின் தலைவாயிலின் மீது கட்டி வைத்து விடுங்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய கல் உப்பை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கல் உப்பை அதில் நிரப்பி அதே இடத்தில் கட்டி வையுங்கள். இப்படி செய்வதால் வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி குடும்ப உறுப்பினர்கள் சண்டை, மனஸ்தாபங்கள் ஏற்படாமல் தடுத்து அமைதி ஏற்படும்.
ஒரு சிறிய அளவிலான கண்ணாடி குவளை நிறைய கல்லுப்பை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கு அல்லது ஐந்து கிராம்புகளை போட்டு உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மூலையில் யார் கண்ணிலும் இந்த கண்ணாடி குவளை படாத வகையில் வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பல்லி பரிகாரம்
கல்லுப்பு மற்றும் கிராம்பு இரண்டுமே மகாலட்சுமி தேவி அம்சம் நிறைந்ததாகும். இந்த இரண்டு பொருட்களை கலந்து வீட்டில் இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் பணமுடை, பண விரயங்கள் ஏற்படுத்துகின்ற எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி பொருள் வளம் சேர்வதற்கு இந்தக் கல்லுப்பு கிராம்பு வழி வகை செய்யும்.