
பொடுகு தொல்லை என்பது ரொம்பவும் சிக்கலான ஒன்று! தலையில் அதிகம் பொடுகு இருந்தால், அது தலைமுடியை வேர்க்காலில் இருந்து சேதமடைய செய்து விடுகிறது. மேலும் அதிகப்படியான முடியையும் இழக்க வேண்டி இருக்கும். பொடுகு, தலையை மட்டும் அல்லாமல் சருமத்தின் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும்.
முகப்பருக்கள், கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கும் பொடுகை, உங்கள் தலையில் இருந்து ஒரேடியாக விரட்டி அடிப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறுவதற்கு வீட்டில் இருக்கும் இந்த சாதாரண ரெண்டு பொருட்கள் பயன்படுத்தினால் போதும், ஒரே குளியலில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். முதலில் முட்டையின் வெள்ளை கருவை முட்டையிலிருந்து பிரித்தெடுத்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியின் அடர்த்தி மற்றும் நீளத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளை கருவை நீங்கள் எடுக்க வேண்டும்.
முட்டையில் ஏராளமான விட்டமின்கள், மினரல்கள், புரோட்டீன்கள் நிரம்பி உள்ளன. இது தலைமுடியை நன்கு வலுவாக்கக்கூடிய சக்தி வாய்ந்த மூலக்கூறாக செயல்படும். அடுத்ததாக இதனுடன் புளிக்காத கெட்டி தயிர் சேர்க்க இருக்கிறோம். ஒரு முட்டையின் வெள்ளை கருவிற்கு, ஒரு டீஸ்பூன் கெட்டி தயிர் சேர்க்க வேண்டும். இரண்டு எடுத்தால் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்கு பீட்டர் அல்லது டீஸ்பூன் வைத்து கலந்து கொள்ளுங்கள்.
திக்கான பேஸ்ட் போல வர வேண்டும். தயிரில் இருக்கும் இயற்கையான கண்டிஷனிங், தலைமுடியை வலுவாக்கி பளபளப்படைய செய்யும். உங்களுடைய முடி சில்க் அண்ட் ஸ்மூத்தாக இருக்க தயிர் நல்ல ரிசல்ட் கொடுக்கும். இரண்டையும் நன்கு கலந்து வைத்த பின்பு தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். தலை முடிக்கு ஸ்கால்ப் பகுதியில் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பின்பு இதனை தடவி 20 லிருந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பின்பு சாதாரணமாக நீங்கள் எப்போதும் குளிப்பது போல குளித்து விட வேண்டும். முட்டை சேர்த்து இருப்பதால் ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். ஷாம்பூ போடும் பொழுது அப்படியே நேரடியாக தலைக்கு போடாமல் கொஞ்சம் தண்ணீருடன் கலந்து வைத்து பின்பு அதனை பயன்படுத்துங்கள். தலையில் அரிப்பு தொந்தரவு இல்லாதவர்கள், நீங்கள் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் சேர்த்து பயன்படுத்தலாம். எலுமிச்சை சேர்க்கும் போது தலையில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்களை ஊக்குவிக்கும்.
இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கட்ட சஷ்டி திதி பரிகாரம்
பொடுகு இறந்த செல்களை தின்று உயிர் வாழக் கூடியவை. பூஞ்சையில் இருந்து உருவாகக் கூடிய இந்த பொடுகு நிரந்தரமாக உங்கள் தலையை விட்டு நீங்குவதற்கு தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது இதனை பின்பற்றி வாருங்கள். பொடுகு இருப்பவர்கள் தலைக்கு அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு சுத்தமாக குளித்து கழுவி விட வேண்டும். இதனால் மீண்டும் பொடுகு பிரச்சனை வராமல் இருக்கும்.