வெகு நாட்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். சொந்த வீடு கட்டுவதற்கு நிறைய ஆசை கனவு இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்கின்றோம். ஆனால் நேரமும் காலமும் கைக்கூடி வரவில்லை. சொந்த நிலமோ வீடோ வாங்குவதற்கு உண்டான சந்தர்ப்பம் அமையவில்லை. பணமும் சேர்வதற்கும் நிறைய இடையூறுகள் தடைகள் இருக்கிறது.
இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும். பணம் சேருவதற்கு உண்டான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்ப்புகள் கைகூடி வர வேண்டும். சொந்த வீடு நிலம் வாங்குவதற்கான யோகம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் சஷ்டி திதியில் இந்த ஒரு பொருளை தானம் செய்யுங்கள். நிச்சயமாக சொந்த வீடு கட்டும் யோகம் உங்களைத் தேடி வரும்.
அதேபோல சொந்த வீடு வைத்திருந்து அதில் ஏதாவது சிக்கலில் சிக்கிருந்தால், அந்த சிக்கல்களும் விலகும். இருக்கும் வீடு அடமானத்தில் இருந்தாலோ, அல்லது வீட்டில் ஏதோ ஒரு சிக்கலின் மூலம் பிரச்சினைகள் இருந்தாலும், அதுவும் சரியாகும். ஆக மொத்தம் வீடு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் உங்களுக்கு இருந்தாலும், கண்களை மூடி, முருகா என்று சொல்லி இந்த பரிகாரத்தை படிச்சுக்கோங்க. நாளைய தினம் இதை நம்பிக்கையோடு செய்து விடுங்கள்.
சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய தானம்
இந்த பரிகாரத்தை கட்டாயம் முருகர் கோவில் தான் செய்ய வேண்டும். முருகர் கோவிலில் காலை 6:00 மணிக்கு முன்பாக சென்று செய்து விடுங்கள். முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு பின்பு சென்று இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். முருகர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முருகரை அடி பிரதக்ஷணம் செய்து ஒரு முறை வலம் வர வேண்டும். ஒரு முறை வலம் வந்தால் போதும். உங்களால் முடியும் என்றால் 6 முறை அடிப்பிரதட்சணம் செய்யலாம். ஆனால் அது கொஞ்சம் கடினமான விஷயம்.
கடினமான வேண்டுதல், கடினமான பிரச்சனை சூழ்நிலை ரொம்பவும் மோசமாக இருக்கிறது இந்த பிரச்சனைக்கு அடுத்த வாரம், அடுத்த மாதம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆறு முறை அடி பிரதட்சணம் செய்யுங்கள். தவறு கிடையாது. அடி பிரதட்சணம் செய்ய வேண்டியது முருகன் கோவிலில் இந்த பரிகாரத்தை நிறைவேற்றி விடுங்கள்.
பிறகு நீங்கள் நாளைய தினம் செய்ய வேண்டிய தானம் என்னவென்றால் குடைதான். இந்த தானத்தை நீங்கள் நாளை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் செய்யலாம். இப்போது வெயில் காலம் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். ஏழை மக்களுக்கு, இயலாதவர்களுக்கு குடைகள் வாங்கி தானம் செய்யலாம். எப்படி தெரியுமா? உங்களுக்கு வசதி இல்லை என்றால், சின்னதாக குடை வாங்கி தானம் செய்யுங்கள்.
கொஞ்சம் வசதி இருக்கிறது என்றால், வீதிகளில் காய்கறி விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள் பூக்கள் விற்பவர்கள் எல்லாம் வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். குறிப்பாக செருப்பு தைப்பவர்களுக்கு பெரிய குடையாக வாங்கி தானம் செய்யுங்கள். அந்த குடை நிழலில் அவர்கள் அன்றாடம் வியாபாரம் நடத்துவதற்கு வசதியாக குடையை வாங்கி தானம் கொடுத்தால், உங்களுடைய வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையானது உடனடியாக தீரும்.
இப்படிப்பட்டவர்களை தேடி அலைய வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லோர் ஊரிலும் கடைவீதிக்கு சென்றால் இப்படிப்பட்டவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் கேட்டே அவர்களுக்கு தகுந்தபடி ஒரு குடையை வாங்கிக் கொடுங்கள்.
இரண்டாவதாக வீதிகளுக்கு வந்து பொருட்களை விற்பவர்களுக்கு நல்ல செருப்பு இருக்காது. அப்படிப்பட்டவர்களாக தேர்ந்தெடுத்து ஒரு நல்ல செருப்பை வாங்கி அவர்களுக்கு தானம் கொடுக்கலாம். உங்கள் வீட்டுக்கு காய்கறி விற்க வருபவர்கள் மீன் விற்க வருபவர்கள் இன்னும் எத்தனையோ வியாபாரிகள் இதுபோல இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த தானத்தை செய்வது மிக சிறப்பான பலனைத் தரும். கண்ணை மூடிக்கொண்டு யாருக்கோ கொண்டு போய் தானம் கொடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் கொடுக்கும் தானம் அடுத்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் மேம்பாலத்திற்கு அடியில் வீடு இல்லாமல் பெட்ஷீட் விரித்து படுத்து உறங்குபவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு சின்னதாக டென்ட் போல இப்போது எல்லாம் ரெடிமேட் ஆக கிடைக்கிறது. அது போல ஒரு தூங்குவதற்கு வசதியான, டென்ட் வாங்கி கொடுப்பது மிக மிக சிறப்பான பலனைத் தரும். ஒண்ணுமே இல்லாதவர்களுக்கு கொஞ்சம் மறைவான இடத்தை தூங்குவதற்காக நாம் வசதி செய்து தந்திருக்கின்றோம். அவர்களுக்கு அது தான் வீடு.
இதையும் படிக்கலாமே: 18-02-2025 தேய்பிறை சஷ்டி முருகர் வழிபாடு
மனதார மேல் சொன்ன இந்த தானத்தை உங்களால் முடிந்த வரைக்கும் செய்யுங்கள். மேலே சொன்ன அத்தனையும் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏதாவது ஒரு தானத்தை செய்தால் கூட போதும், நிச்சயமாக ஒரு வருடத்திற்குள் நீங்கள் நினைத்த நல்லது நடந்தே தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.