- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

ஒரே ஒரு மாதுளை பழம் இருந்தால் போதும். உங்கள் முக அழகை கூட்டி இளமையான தோற்றத்தை பெறலாம். அதோடு முகப்பருக்களை நீக்கி சருமத்தை மிருதுவாக்கலாம்.

- Advertisement -

மாதுளை அழகு குறிப்புகள் – Pomegranate skin benefits in Tamil

மாதுளை பழம் என்பது இயற்கை மனிதர்களுக்கு அளித்த ஒரு அற்புதமான கனி வகையாகும். குளிர் மற்றும் வெப்ப மண்டலம் ஆகிய இரு வகையின் நில அமைப்புகளிலும் விளைகின்ற ஒரு அற்புதமான பழம் மாதுளை. மாதுளை பழத்தை பெரும்பான்மையான மக்கள் உணவு தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் மாதுளை பழத்தில் பெண்களின் முக அழகை மேம்படுத்தக்கூடிய பல ஆற்றல்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் மாதுளை பழம் பயன்படுத்தி செய்ய கூடிய சில முக அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மாதுளை பழம் பேஸ் பேக்

கிரீன் டீ, தேன், மற்றும் மாதுளை பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை முகத்தில் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எனவே இந்த மூன்று பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை போக்க கூடிய பேஸ் பேக் தயாரிக்கும் முறை பற்றி இங்கே நாம் காணலாம். ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நன்கு அரைத்த மாதுளை பழ விழுதை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பசுந்தயிர், 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கிரீன் டீ தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை பெண்கள் தங்கள் முகம் முழுவதும் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக முகப்பருக்கள் அதிகம் ஏற்படும் கண்ணத்தின் மேற்புறங்களில் நன்கு தட வேண்டும். முகத்தில் தடவிய இந்த பேஸ் பேக்கை சுமார் 20 நிமிடம் வரை காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு இருமுறை இந்த மாதுளை பழம், கிரீன் டீ பேஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவது குறையும்.

முகம் இளமையாக இருக்க:

எல்லா பெண்களுக்குமே தங்களின் முகம் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்கு மாதுளை பழம் மற்றும் கோக்கோ பவுடர் ஆகிய இரு பொருட்களும் உதவும். கோக்கோ பவுடர் தற்காலத்தில் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு பொருட்களை கொண்டு இப்போது ஒரு பேஸ் பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.

- Advertisement -

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நன்கு அரைத்த மாதுளம் பழ விழுதை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோகோ பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவை மிகவும் கெட்டியாக ஆகிவிட்டால், மிகக் குறைந்த அளவில் நீர் விட்டு மீண்டும் நன்கு கலந்து, ஒரு பேஸ்ட் பதத்தில் தயாரிக்க வேண்டும். தயாரான இந்த ஃபேஸ் பேக் கலவையை பெண்கள் தங்களின் முகம் முழுவதும் நன்கு தடவி ஒரு 20 நிமிடங்கள் வரை அப்படியே காய விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

மாதுளை பழம் மற்றும் கோக்கோ பவுடர் ஆகிய இரண்டிலும் மனிதர்களின் உடலில் இருக்கும் செல்கள் சீக்கிரம் முதுமை அடையாமல் தடுத்து, இளமையை நீட்டிக்க செய்யும் ஆற்றல்கள் உண்டு. எனவே வாரத்திற்கு இருமுறை இந்த பேஸ் பேக்கை பெண்கள் பயன்படுத்துவதால் அவர்களின் முகம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.

சருமம் மிருதுவாக

சில பெண்களின் முக சருமம் மிகவும் கடினத் தன்மை வாய்ந்ததாக மாறி அவர்களின் அழகை கெடுக்கும். தங்களின் முகத்தில் இருக்கின்ற சருமம் மீண்டும் மிருதுவான தன்மையை பெற 1/2 கப் அளவிற்கு மாதுளை பழ விதைகளை எடுத்து, அவற்றை நன்கு அரைத்து அந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு ஓட்ஸ் மீல் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கலவையை பெண்கள் தங்களின் முகம் முழுவதும் நன்கு தடவி ஒரு 30 நிமிடங்கள் வரை அப்படியே காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்வதால் பெண்களின் முக சருமத்தில் இருக்கின்ற கடினத்தன்மை குறைந்து, முகச் சருமம் மீண்டும் மிருதுவாகும். மேலும் முகத்தோலில் இருக்கின்ற செல்கள் சீரான வளர்ச்சியை பெறவும் இது உதவும்.

- Advertisement -
Published by