இனி ஒரு முடி கூட கொட்டாது. வாரத்தில் 1 நாள் மட்டும் இந்த ஹேர் பேக் போடுங்க போதும்.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்த போஷாக்கு நிறைந்த எளிமையான ஒரு ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இதற்கு அதிகப்படியான செலவு செய்ய வேண்டாம். ஆனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் மிக மிக அதிகம். உடனடியாக முடி உதிர்வை நிறுத்தி, உடனடியாக முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய, அந்த ஹேர் பேக் என்ன என்று உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த அழகு குறிப்பு நிச்சயம் உங்களுக்கு அழகான கூந்தலை கொடுக்கும்.

முடி உதிர்வை குறைக்கும் எளிமையான ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான பொருட்கள் வெந்தயம், தேங்காய் பால், முட்டை, இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும். அடுத்த நாள் ஹேர் பேக் போடுவதாக இருந்தால் வெந்தயத்தை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை எழுந்து இரண்டு கைப்பிடி அளவு தேங்காயை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி,  திக்கான பாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலை ஊற்றி தான் ஊற வைத்த வெந்தயத்தை அரைக்க வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க ஊற வைத்த வெந்தயத்தை போடுங்க. கொஞ்சமாக தேங்காய் பால் ஊற்றி இதை விழுது போல அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதோடு 1 முட்டையை சேர்க்க வேண்டும். உங்களுடைய முடி ரொம்பவும் அடர்த்தி ரொம்பவும் பெரியது என்றால் 2 முட்டை கூட சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளை கரு மட்டும் சேர்க்கலாம், அல்லது மஞ்சள் கருவாடு சேர்த்தாலும் உங்களுக்கு வாடை பிரச்சினை இல்லை என்றால், மஞ்சள் கருவோடு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி இந்த ஹேர் பேக்கை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

எப்போதுமே முட்டை சேர்த்த ஹேர்பேக் போடும்போது, அந்த வாடை நம்முடைய தலையில் வராமல் இருக்க எசன்சியல் ஆயில் ஏதாவது அந்த ஹேர்பக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். ‘டீ ட்ரீ எசன்சியல், ரோஸ் மெரி எசன்சியல் ஆயில்’ இப்படி ஏதாவது ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு, அதிலிருந்து இரண்டு சொட்டு மட்டும் அந்த ஹேர் பேக்கில் ஊற்றி கலந்து உங்களுடைய தலைமுடியில் ஹேர் பேக் போட்டுக் கொள்ளவும். (எசன்சியல் ஆயில் சேர்த்து ஹர்பேக் போட்டால் தலைமுடி வாசமாக இருக்கும்).

- Advertisement -

தலையில் ஹேர் பேக் போடுவதற்கு முன்பு தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு, ஹேர் பேக் போட்டு வெறும் 15 நிமிடங்கள் கழித்து முடியை ஷாம்பு போட்டு அலசி விட்டால் கூட போதும். உங்களுடைய முடி உடனடியாக வலுபெறும். இந்த பேக்கை போட்டுவிட்டு தலைக்கு குளிக்கும் போது முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். (வாரத்தில் ஒரு நாள் இந்த பேக் போடலாம். முடியாதவர்கள் மாதத்தில் இரண்டு நாளாவது இந்த பேக்கை முயற்சி செய்து பாருங்கள்).

சில பேருக்கு ரொம்பவும் குளிர்ச்சியான உடம்பு இருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் வெந்தயம் பயன்படுத்தாதீங்க. சைனஸ் பிரச்சனை வந்துவிடும். வெறும் தேங்காய் பால், முட்டை சேர்த்து கலந்து ஹேர் பேக் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் தலைமுடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி வெந்தயத்திற்கு உண்டு, உடல் சூட்டின் மூலம் முடி உதிர்வு ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும் இந்த வெந்தயத்துக்கு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: முடியின் வளர்ச்சி 3 மடங்கு படு வேகமாக அதிகரிக்க, இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து தலையில் போட்டாலே போதும். கருகருன்னு முடி, காடு போல வளரும்.

வெந்தயத்தை அரைத்து அப்படியே போட்டால் தலையில் அதிக குளிர்ச்சி இருக்கிறது என்றால், வெந்தயத்தை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த வெந்தய தண்ணீரை தலைமுடியில் ஸ்பிரே செய்து வந்தால் கூட, தலைமுடி நன்றாக வளரும். அதே சமயம் தலைபாரம், சளி பிடிக்கும் என்ற பிரச்சனையும். இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். அழகான அடர்த்தியான முடியை பெறலாம்.

- Advertisement -