
நிறைய பேர் வீட்டில் இப்போது இல்லத்தரசிகளும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக மாறிவிட்டார்கள். வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கக் கூடிய பெண்களும் இருக்கிறார்கள். வேலை சுமை அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தினால், பூஜை பாத்திரங்களை தேய்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ பூஜை பாத்திரங்களை தேய்த்து வைத்தாலும் அந்த பாத்திரங்கள் கருத்துப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. உங்களுக்காக இதோ ஒரு எளிமையான வீட்டு குறிப்பு.
முதலில் பூஜை பாத்திரங்களை எல்லாம் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பர் அல்லது துணி வைத்து அதில் இருக்கும் எண்ணெய் குங்குமத்தை துடைத்து விட வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில், சபீனா பௌடர் 2 ஸ்பூன், கோதுமை மாவு 2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பொடியை பூஜை பாத்திரங்களின் மேலே தூவி லேசாக தண்ணீர் தெளித்து, ஒரு ஸ்பாஞ்சு நாரை கொண்டு இந்த பொடி எல்லா இடங்களிலும் படும் வரை பூசி விடுங்கள்.
ஒரு 5 லிருந்து 7 நிமிடம் இது அப்படியே ஊறட்டும். பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து விபூதியில் தொட்டு பூஜை பாத்திரங்களை தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் அப்படியே புதுசாக மாறிவிடும். கை வலிக்க அழுத்தி அழுத்தி கூட தேய்க்க வேண்டாம். லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளக்க தொடங்கிவிடும்.
பிறகு இதை நல்ல தண்ணீரைக் கொண்டு சுத்தமாக கழுவி விடுங்கள். உப்பு தண்ணீரில் கழுவ வேண்டாம். அடுத்தபடியாக நல்ல ஒரு காட்டன் துணியைக் கொண்டு இந்த பூஜை பாத்திரங்களை துடைத்துவிட்டு கொஞ்ச நேரம் ஆற வைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றிப் பாருங்கள். மனசுக்கு அவ்வளவு திருப்தி இருக்கும். பூஜை அறை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
சாதாரணமாக பூஜை பாத்திரங்களை தேய்த்தால் ஒரு வாரத்திலேயே கருத்து போகும். இந்த முறைப்படி பூஜை பாத்திரங்களை தேய்த்தால் ஒரு மாதம் ஆனாலும் கருத்து போகாது. தேவைப்படுபவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். சபீனா பவுடர் உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை.
இதையும் படிக்கலாமே: சிங்க் பாத்திரங்களை எளிமையாக தேய்த்து முடிக்க வீட்டு குறிப்பு
பாத்திரம் தேய்க்கும் சோப்பை நன்றாக துருவி அந்த பொடியில், கோதுமை மாவை கலந்தும் இந்த குறிப்பை பின்பற்றலாம். ரிசல்ட்நல்லாவே கிடைக்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு இல்லத்தரசிகளுக்கு பிடித்திருந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை சொல்லிக் கொடுத்து பயனடையலாம்.