பரபரப்பாக சமையலை முடித்துவிட்டு, சமையல் மேடையை சுத்தம் செய்து விட்டு, அப்படி திரும்பிப் பார்த்தால், சிங்கில் குவிந்திருக்கும் பாத்திரம் இல்லத்தரசிகளின் கண்களை கலங்க வைக்கும். கேஸ் ஸ்டவ் முழுவதும் அலங்கோலமாக அழுக்காக மாறி இருக்கும். பாத்திரத்தை தேய்த்து முடித்த பிறகு சிங்க் கொழகொழன்னு நம்மைப் பார்த்து அழும். இந்த மூன்று பிரச்சனைகளுக்கு எப்படி எளிதாக தீர்வு காண்பது. அதற்காகத்தான் பயனுள்ள இந்த மூன்று வீட்டு குறிப்புகள்.
சமையலறையில் கஷ்டமான இந்த மூன்று வேலையை சுலபமாக்க
முதலில் பாத்திரத்தை சுத்தம் செய்து விடுவோம். ஒரு சின்ன கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், 1 சின்ன மூடி வினிகர், 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை தொட்டு சிங்கிள் கிடக்கும் பிசுபிசுப்பான பாத்திரங்களை சுலபமாக தேய்த்து சுத்தம் செய்து விடலாம்.
பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு முழுமையாக நீங்கி பாத்திரம் ஜொலி ஜொலிக்கும். சாதாரணமாக சோப்பு தொட்டு பாத்திரத்தை தேய்ப்பதற்கும், இந்த லிக்விடை தொட்டு பாத்திரத்தை தேய்ப்பதற்கும் நிறையவே வித்தியாசத்தை உணருவீர்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
அடுத்து நமக்கு எல்லாம் தினமும் சமைத்துப் போடும் ஸ்டவ்வை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வது நம்முடைய கடமை. ஒரு சின்ன வாட்டர் பாட்டிலில், விம் லிக்விட் 1 ஸ்பூன், சமையல் சோடா 1 ஸ்பூன், வினிகர் 1 மூடி, எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன், 1 சின்ன டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக குளிக்கினால் சூப்பர் ஸ்ப்ரே தயார். இதை 10 நாள் வரை ஸ்டோர் செய்யலாம்.
இந்த ஸ்ப்ரேவை ஸ்டவ், சமையல் மேடையில் நன்றாக ஸ்பிரே செய்து ஒரு துணியை வைத்து துடைத்து எடுத்தாலே எண்ணெய் பிசுக்கு முழுமையாக நீங்கிவிடும். அழுக்கான காலியான சிங் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. என்னையும் சுத்தம் செய் என்று சொல்கிறது. எலுமிச்சை சாறு பிழிந்த தோல் இருக்கும் அல்லவா. அதை எடுத்துக்கோங்க.
சிங்கிள் கொஞ்சமாக சபீனா பவுடர் தூவி இந்த எலுமிச்சம்பழத் தோலை வைத்து நன்றாக தேய்த்து பிறகு, ஒரு ஸ்டீல் நாரை போட்டு நன்றாக தேய்த்து சிங்கை கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இப்போது உங்களுடைய சமையல் அறையை திரும்பிப் பாருங்கள். சமையலறையில் நீண்ட நேரம் எச்சில் பாத்திரத்தை அப்படியே போட்டு வைக்கக்கூடாது.
இதையும் படிக்கலாமே: எளிமையான வீட்டு குறிப்பு
சமைத்து முடித்த பிறகு வெறும் 10 நிமிடம் நீங்கள் செலவழித்தால் போதும். அந்த சிங்கில் பாத்திரம் சுத்தமாகிவிடும். இதனால் உங்களுடைய வீட்டில் ஈ தொந்தரவு கொசு தொந்தரவு கரப்பான் பூச்சி தொந்தரவு வராமல் இருக்கும் முயற்சி செய்து பாருங்கள். மனநிறைவோடு சந்தோஷமாக இருக்கும். சமையலறை ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு இல்லத்தரசிகளின் கை வலியையும் குறைக்கும்.