- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இனி வரும் விசேஷ நாட்களுக்கு பூக்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் இப்பவே வாங்கி இப்படி வச்சிருங்க. ஒரு மாசம் ஆனாலும் கெட்டுப் போகாமல் நல்ல பிரஷ்ஷா இருக்கும். அதுவும் பிரிட்ஜில் வைக்காமலே.

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே இனி அடுத்தடுத்து விசேஷமான நாட்கள் தான். அது மட்டும் இன்றி வீட்டில் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் பூஜை செய்வது பணிக்கு செல்பவர்கள் தினமும் தலைக்கு வைத்துக் கொள்ள என பூக்களை எப்போதும் வாங்கி வைப்பது நல்லது தான். அதுவும் விலை மலிவான நாட்களில் வாங்கி வைத்து விட்டால் இது போன்ற நாட்களில் அதிக விலை கொடுத்து வாங்காமல் பணத்தை மிச்சப்படுத்தலாம். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் ஒரு மாதம் ஆனால் கூட பூக்கள் வாடாமல் எப்படி பத்திரமாக வைத்திருப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாதம் ஆனாலும் பூக்கள் வாடாமல் இருக்க இந்த முறையில் பூக்களை பாதுகாக்க முதலில் பூக்களை நல்ல மொட்டுக்களாக இருக்கும் போதே வாங்க வேண்டும். இது மிக மிக அவசியம் மலர்ந்த பூக்களை வாங்கி கட்டி வைத்தால் நிச்சயம் தாங்காது. எனவே பூக்கள் நல்ல மொட்டுக்களுடன் இருக்கும் போதே வாங்கி விடுங்கள். அடுத்து வாங்கி வந்த பூக்களை வீட்டில் மெல்லிய சல்லடை போன்ற காட்டன் துணியில் கொட்டி வைத்து விடுங்கள். இதனால் பூக்களில் இருக்கும் ஈரம் இழுத்து விடும் பூக்கள் அழுகாது.

- Advertisement -

அடுத்து எப்போதும் தொடுப்பது போல பூக்களை கட்டிய பிறகு நீங்கள் வாங்கி இருக்கும் பூக்களுக்கு ஏற்றவாறான ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதின் அடியில் கொஞ்சம் வாழை இலையில் நறுக்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு மேலே பூக்களை நன்றாக பந்து போல சுருட்டி அழுத்தாமல் வைத்து விடுங்கள். வாழைஇலையை நறுக்கிய பிறகு அதில் இருக்கும் தண்டுகளை சின்ன சின்ன துண்டாக நறுக்கி அதையும் இந்த பூக்களுடனே போட்டு மேலேயும் வாழ இலையை போட்டு மூடி அப்படியே பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் மாணவர் கூட இந்த பூக்கள் அப்போது கட்டியது போல பிரஷ்ஷாக இருக்கும். இதை தேவைப்படும் பொழுது கொஞ்சமாக எடுத்துக் கொண்டு மறுபடியும் இதே போல பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

வாழை இலை இல்லை என்றால் இதே முறையில் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்திக் கொள்ளலாம். பாத்திரத்தின் அடியில் ஒரு நாலைந்து டிஷ்யூ பேப்பரை மொத்தமாக வைத்து விட்டு அதன் மேல் பூக்களை வைத்து மீண்டும் இதே போல் கொஞ்சம் அதிகமாக டிஷ்யூ பேப்பரை வைத்து மூடுங்கள் பூக்கள் வாடாது. இதே முறையில் நாம் மற்ற பூக்களையும் பாதுகாப்பாக வைக்கலாம். இந்த முறைக்கு நியூஸ் பேப்பர் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நியூஸ் பேப்பர் பயன்படுத்தும் போது ஒரு பத்து நாட்கள் வரை வைக்கலாம் ஒரு மாதம் வரை எல்லாம் தாங்காது.

- Advertisement -

அடுத்து ஃப்ரிட்ஜ் இல்லை என்றாலும் இந்த பூக்களை எப்படி வாடாமல் வைப்பது என்று பார்த்துக் கொள்ளலாம். அதற்கும் இதே போல பூக்களை கட்டிய பிறகு மெல்லிய காட்டன் துணி அல்லது இப்பொழுதெல்லாம் கடைகளில் கேரிபேக்கிற்கு பதிலாக துணிப்பை தருகிறார்கள். அதில் பூவை வைத்து விட்டு மேலே தண்ணீர் தெளித்து விடுங்கள். இதை ஒரு சில்வர் டப்பாவில் வைத்து மூடி அப்படியே வைத்து விடுங்கள். இந்த துணியை மட்டும் அவ்வப்போது எடுத்து ஈரப்படுத்தி கொள்ளுங்கள். பூ வாடாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி விசேஷ நாட்களில் பூஜை பாத்திரங்களை கைவலிக்க தேய்த்து கஷ்டப்பட வேண்டாம். பித்தளை விளக்கு தங்கம் போல ஜொலிக்க இந்த 1 பொருள் போதும்.

இதையே இன்னொரு முறையிலும் வைக்கலாம். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் மேல் வாழை இலையை வைத்து அதன் மேல் பூக்களை வைத்த பின்பு மேலே இதே போல் ஈர துணி அல்லது அந்த துணிப்பை போட்டு மூடி வைத்து விடுங்கள். இதிலும் அதே போல் அவ்வப்போது அந்த துணியை ஈரப்படுத்திக் கொண்டே இருங்கள். இந்த முறையிலும் 20 நாட்கள் வரை கூட பூக்கள் வாடாமல் இருக்கும். பூக்கள் அதிக நாட்கள் வாடாமல் இருக்க மேற்கூறிய குறிப்புகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -