இனி விசேஷ நாட்களில் பூஜை பாத்திரங்களை கைவலிக்க தேய்த்து கஷ்டப்பட வேண்டாம். பித்தளை விளக்கு தங்கம் போல ஜொலிக்க இந்த 1 பொருள் போதும்.

poojai-pathiram
- Advertisement -

சாமி கும்பிடும் விசேஷ நாட்கள் வந்து விட்டால், வீட்டில் இருக்கும் வேலையோடு சேர்த்து பூஜை அறையில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை தேய்ப்பதில் பெண்களுக்கு கஷ்டம் இருக்கும். கை வலிக்க வீடு துடைத்து இருப்பார்கள். கை வலிக்க வலிக்க துணி துவைத்து, வீட்டின் மற்ற வேலைகளை எல்லாம் முடித்து களைத்து போய் இருக்கும் சமயத்தில் பூஜை பாத்திரங்களை அழுத்தி தேய்க்க முடியாது. அந்த சமயத்தில் இந்த ஐடியா நிச்சயம் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகும். வாங்க இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு என்ன என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

பித்தளை பாத்திரங்களை சுலபமாக தேய்க்க பயனுள்ள வீட்டு குறிப்பு:
முதலில் எண்ணெய் பிசிக்கோடு இருக்கும் பித்தளை பாத்திரங்களை ஒரு துணியை வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு குங்குமம் எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும். பிறகு நன்றாக புளித்த தயிரை இந்த பித்தளை பாத்திரங்களின் மேல் தடவி, பத்து நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். அது அப்படியே ஊறிக் கொண்டிருக்கட்டும்‌. (பிரிட்ஜில் இருக்கும் தயிரை வெளியில் எடுத்து வைத்து ஒரு நாள் வரை நன்றாக புளிக்க விடணும்.)

- Advertisement -

சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் தேவையான அளவு கோதுமை மாவு 2 ஸ்பூன் அளவு, ஷாம்பு 2 ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 2 ஸ்பூன் போட்டு இதை கொஞ்சம் திக்கான பேஸ்ட் போல பிசைந்து கொள்ளவும்.

பத்து நிமிடம் புளித்த தயிரில் நன்றாக ஊறி இருக்கும் பித்தளை பாத்திரத்தின் மேல் மீண்டும் நாம் பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவை தேய்த்து ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு பாத்திரம் தேய்க்கும் ஸ்பான்ச் நாரை கொண்டு லேசாக பித்தளை பாத்திரங்களை தேய்த்துக் கொடுத்தாலே பாத்திரங்கள் ஜொலிஜெலிக்க தொடங்கிவிடும். கருத்துப் போன பித்தளை பாத்திரத்தை தங்கம் போல சுலபமாக ஜொலிக்க வைக்கலாம். உப்பு தண்ணீரில் நீங்கள் பித்தளை பாத்திரங்களை கழுவினாலும் உடனடியாக அதை நல்ல தண்ணீரில் கழுவி ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

துடைத்து எடுத்த இந்த பித்தளை பாத்திரங்களுக்கும் மேலே கொஞ்சமாக விபூதி தூவி, உங்கள் விரல்களால் துடைத்து எடுத்தால் அதில் மிச்சம் மீதி ஒட்டி இருக்கும் கருப்பு நிறம் உங்கள் விரலோடு ஒட்டி வந்து விடும். பிறகு ஒரு வெள்ளை துணியை போட்டு இந்த பித்தளை பாத்திரங்களை துடைத்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி பாருங்கள். விளக்கு எல்லாம் அப்படியே பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கை வலிக்காமல் பாத்ரூம் கதவில் ஒட்டி பிடித்திருக்கும் உப்பு கறையை நீக்க, சிம்பிளான சூப்பர் ஐடியா. இதை செய்தால், பல வருட கணக்கில், பாத்ரூம் கதவில் உப்பு கறை மீண்டும் பிடிக்கவே பிடிக்காது.

அது மட்டும் இல்லாமல் இப்படி பூஜை பாத்திரங்களை தேய்த்தால் அந்த பாத்திரங்கள் மீண்டும் நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமலும் இருக்கும். வரக்கூடிய அமாவாசை, விநாயகர் சதுர்த்தி நாட்களில் உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை தேய்க்க இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்.

- Advertisement -