
பஞ்சமி திதிக்குரிய தெய்வமாக திகழக்கூடியவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை பஞ்சமி திதி அன்றுதான் வழிப்பட வேண்டும் என்று இல்லை ஒவ்வொரு நாளும் நாம் வழிபட வழிபட நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படும் பௌர்ணமி திதி. அன்று வாராகி அம்மனை வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும் நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபடுவதாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்குரிய முழுமையான பலனை பெற வேண்டும் என்றால் அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் என்பது இருக்கக் கூடாது. அதனால் தான் வீட்டில் செய்யக் கூடிய வழிபாட்டை விட ஆலயத்தில் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு பலன்கள் அதிகமாக இருக்கிறது. முதலில் வெள்ளிக்கிழமை என்பதே பெண் தெய்வத்திற்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அதேபோல் பௌர்ணமி தினமும் பெண் தெய்வத்திற்குரிய தினமாக கருதப்படுகிறது. இந்த வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நாளைய தினம் வீட்டிலேயே வராகி அம்மனை எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வாராகி அம்மன் வழிபாட்டை நாம் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்யலாம் அல்லது பௌர்ணமி திதி ஆரம்பிக்கும் நேரம் காலை 7:44 இல் இருந்து 7:49 அதாவது முதல் ஐந்து நிமிடம் செய்யலாம். மாலை 5;30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகுவதற்கு ஒரு சிறிய சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது கல்லுப்பு, அரை எலுமிச்சம் பழத்தின் சாறு இவற்றை கலந்து கொள்ள வேண்டும். உங்கள் கைகள் அதில் படக்கூடாது. வெற்றிலையை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் வீட்டிற்கு வெளியே சென்று முதலில் உங்கள் நிலை வாசலை சுற்றி இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இந்த தண்ணீரை தெரிவித்து வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும். பிறகு வாராஹி அம்மனுக்கு மூன்று அகலில் தீபம் ஏற்ற வேண்டும். அதில் ஒரு தீபம் மட்டும் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். மீதி இரண்டு தீபமும் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.
நாளை பௌர்ணமி திதி என்பதால் பாலால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரசாதத்தை நிறைவேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு வராகி அம்மனின் 12 நாமங்களை கூற வேண்டும். அந்த நாமங்கள்
ஓம் ஸ்ரீ பஞ்சமீ நமஹ
ஓம் ஸ்ரீ தண்ட நாதேஸ்வரி நமஹ
ஓம் ஸ்ரீ ஸங்கேதா நமஹ
ஓம் ஸ்ரீ ஸமயேஸ்வரி நமஹ
ஓம் ஸ்ரீ ஸமயஸங்கேதா நமஹ
ஓம் ஸ்ரீ வாராஹி நமஹ
ஓம் ஸ்ரீ போத்ரிணி நமஹ
ஓம் ஸ்ரீ சிவா நமஹ
ஓம் ஸ்ரீ வார்த்தாளி நமஹ
ஓம் ஸ்ரீ மஹாசேனா நமஹ
ஓம் ஸ்ரீ ஆக்ஞா சக்ரேஸ்வரி நமஹ
ஓம் ஸ்ரீ அரிக்ணி நமஹ
அந்த தீபத்தை பார்த்தவாறு இந்த நாமங்களை மனதார உச்சரித்து வராகி அம்மனுக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி வழிபாடு
இப்படி வழிபாடு செய்யும்பொழுது நாம் என்ன வேண்டுதல் வைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதலை உடனே வாரி வழங்கும் கருணை மனம் கொண்ட தெய்வமாக வாராகி அம்மன் திகழ்வாள்