- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை தீர்க்கும் வாராஹி வழிபாடு

கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி வழிபாடு

- Advertisement -

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களில் ஒருவர்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி அவளின் பாதங்களில் சரணாகதி அடைபவர்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகளும், மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. வாராகி அம்மனின் அருள் இருந்தால் மட்டுமே தான் அவர்களால் வாராகி அம்மன் தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதே சமயம் வாராகி அம்மனின் ஆலயத்திற்கும் செல்ல முடியும். அப்படி வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று எந்த கிழமையில் எப்படி வழிபட்டால் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் பஞ்சமி திதி அன்று வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே வாராகி அம்மன் சிலையை வைத்து அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். இதை தவிர்த்து விட்டு வாரத்தில் ஒரு நாள் வாராவாரம் ஒரே ஒரு கிழமையில் தொடர்ச்சியாக வாராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். காலையில் தான் செய்ய வேண்டும். மதிய நேரத்திலோ அல்லது மாலையிலோ அல்லது இரவிலோ செய்யக்கூடாது. அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மன் வீற்றிருக்கும் கோவிலில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யக்கூடாது. நேராக காலையில் எழுந்து வாராகி அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு வாராகி அம்மனுக்கு முதலில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற பூக்களை வாங்கி வாராகி அம்மனுக்கு கொடுத்துவிட்டு மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு வாராகி அம்மனை 9 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும்போது “ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையும் மனதிற்குள் இருக்கவே கூடாது. நிறுத்தி நிதானமாக உச்சரித்த வண்ணம் மெதுவாக அம்மனை வலம் வர வேண்டும். அவசரமாக இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.

- Advertisement -

அப்படி வலம் வந்துவிட்டு அங்கேயே அமர்ந்து கண்களை மூடி வாராகி அம்மனை உங்களுடைய மனதிற்குள் நினைத்து உங்களுடைய கஷ்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அது அனைத்தையும் கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு வாராகி அம்மனை வழிபட்டு வீடு திரும்ப வேண்டும். ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும். எப்பேர்ப்பட்ட இடையூறுகள் இருந்தாலும் அவை அனைத்தும் தவிடு பொடி ஆகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே வாழ்க்கையை மாற்றும் ஆனி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் வாராகி அம்மனை வியாழக்கிழமை தோறும் இப்படி நாம் வழிபட்டு வர நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் வாராஹி அம்மனை வழிபட்டு பலன் பெறலாம்.

சற்று முன்