
பலரது வாழ்க்கையில் தீராத பிரச்சனை என்று ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். எப்படி முயற்சி செய்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். அது கடன் பிரச்சினையாகவும் இருக்கலாம், குடும்பப் பிரச்சினையாகவும் இருக்கலாம், தொழில் ரீதியான பிரச்சினையாகவும் இருக்கலாம், அதே சமயம் வேலை தொடர்பான பிரச்சினையாகவும் இருக்கலாம். மேலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றியடையாமல் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டு இருப்பதும் ஒருவிதமான பிரச்சனைதான். இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு தேய்பிறை சஷ்டி அன்று எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப் பெருமானை வழிபாடு செய்வதற்குரிய திதியாக திகழ்வதுதான் சஷ்டி திதி. இதில் வளர்பிறை சஷ்டி திதியை தான் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும், நல்ல வேலை கிடைக்கும் என்று பலவிதமான பலன்களை கூறுவது உண்டு. எந்த அளவிற்கு முருகப்பெருமானுக்கு வளர்பிறை சஷ்டி உகந்ததாக திகழ்கிறதோ, அதே போல் தான் தேய்பிறை சஷ்டியும் உகந்ததாக திகழ்கிறது. இந்த தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தோ இருக்காமலோ முருகப் பெருமானை வழிபாடு செய்தாலே முருகப்பெருமானின் அருளால் நம்முடைய பிரச்சினைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேய்பிறை சஷ்டியில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
பங்குனி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சஷ்டி என்பது மார்ச் மாதம் 19ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்கி மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இருக்கிறது என்பதால் மார்ச் மாதம் 20ஆம் தேதி முழுவதுமே சஷ்டி திதி என்பது இருக்கிறது. அதனால் இந்த தீப வழிபாட்டை நாம் அன்றைய தினத்தில் ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் இந்த தீபத்தை ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொண்டு முருகப் பெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டு முழுவதும் செவ்வரளி மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் நடுவில் ஒரு விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு முருகப்பெருமானை மனதார நினைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
அந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுக்குத் தெரிந்த முருகனின் மந்திரத்தையோ அல்லது கவசத்தையோ படிக்க வேண்டும். பிறகு உங்களுடைய எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிரச்சினையை கூறி அது விரைவிலேயே தீர வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்வதும் மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே:பங்குனி தேய்பிறை சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தீபத்தை முழுமனதோடு வீட்டில் ஏற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர்வதோடு வெற்றிகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.