
பல சிறப்பு மிகுந்த வழிபாடுகளை பின்பற்றக்கூடிய மாதமாக திகழ்வதுதான் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதம் என்பது மிகவும் விசேஷமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில் முன்னோர்களையும் வழிபாடு செய்வோம். பெருமாளையும் வழிபாடு செய்வோம். சிவபெருமானையும் வழிபாடு செய்வோம். நவராத்திரி என்ற பெயரில் பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்வோம். இவ்வளவு சிறப்பு மிகுந்த புரட்டாசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய சிறிய பரிகாரம் கூட நம் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு பலனைத் தரும். அந்த வகையில் வீண் விரையமும் கடன் பிரச்சினையும் தீருவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை தன்னுடைய நெஞ்சில் வைத்துக் கொண்டிருப்பவர் தான் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு இல்லையேல் மகாலட்சுமி இல்லை என்றே கூறலாம். அதனால் செல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி உடன் மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதனால் பெருமாளுக்கு உரிய மாதமான இந்த புரட்டாசி மாதம் என்பது மகாலட்சுமிக்கும் உரிய மாதமாக கருதப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெற்றவர்களுடைய வீட்டில் வீண்விரயம் என்பது ஏற்படாது. பணவரவு அதிகரிக்கும். அதனால் கடன் பிரச்சனையும் தீரும். பண நெருக்கடியும் குறையும். இவை அனைத்தையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிமுறையை தெரிந்து கொள்வோம்.
புரட்டாசி மாதம் முடிவதற்குள் நாம் இரண்டு பொருட்களை வாங்கி நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அப்படி வைப்பதன் மூலம் வீண்விரயம் குறையும், கடன் பிரச்சனையும் தீரும். அந்த பொருட்கள்தான் நெல் மற்றும் உண்டியல். நம் வீட்டில் அரிசி அளக்கும் படி இருக்கும். பித்தளை படியாக இருக்கும் பட்சத்தில் மிகவும் நல்லது. அந்த படி நிறைய நெல்லை வாங்கி கோபுரமாக அளந்து அதை அப்படியே பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
அது அப்படியே இருக்கட்டும். அதில் ஏதாவது கெட்டுப் போவது போல் உணர்ந்தால் அதை பறவைகளுக்கு தானமாக தந்துவிடலாம். இப்படி படியில் நெல்லை குவித்து வைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு ஏற்படக்கூடிய வீண் விரயங்கள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். பண வரவு சேமிப்பாக உயரும். மேலும் அன்னலட்சுமி மற்றும் தானிய லட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
அடுத்ததாக புதிதாக ஒரு உண்டியலை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த உண்டியல் மண்ணால் செய்யப்பட்ட உண்டியலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்டியலை வெளிப்புறத்தில் நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தடவி அதில் பெருமாளின் நாமத்தை குங்குமத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு இந்த உண்டியலை அப்படியே எடுத்து பூஜையறையில் வைத்து பெருமாளை மனதார நினைத்து உங்களால் எவ்வளவு தொகையை போட முடியுமோ அந்த தொகையை போட வேண்டும். ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை.
தினமும் பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு அந்த உண்டியலில் பணத்தை சேர்த்துக் கொண்டே வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் கடன் பிரச்சனை விரைவில் தீரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்சனை தீர்ந்த பிறகு இந்த உண்டியலில் இருக்கக்கூடிய பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு சென்று திருப்பதி உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி புதஷ்டமி வழிபாடு
இந்த எளிமையான வழிமுறைகளை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களுக்கு பெருமாளின் அருளால் வீண் விரயம் குறையும், கடன் பிரச்சனை தீரும், நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.