- Advertisement -

புத்திர பாக்கியம் உண்டாக செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

16 செல்வங்களில் மிக முக்கியமான செல்வம் மழலை செல்வம் ஆகும். மழலை செல்வம் இல்லை என்றால் மற்ற எத்தனை செல்வம் இருந்தாலும், அது பயன் தராது. கலியுகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் கொண்டிருப்பது புத்திர பாக்கிய தடைகள். இந்த புத்திர பாக்கிய தடை உண்டாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கர்ம வினை தான் முதல் காரணம். புத்திர பாக்கியம் உண்டாக செய்ய வேண்டிய தானம் என்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

கர்ம வினைகள் தீரவும், நீண்ட கால ஏக்கம் அடங்கவும், புத்திர பாக்கியம் பெற இந்த தானத்தை செய்து வர வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. குழந்தை இல்லையே என்று கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபாடு செய்திருப்பார்கள். கடைசியில் என்னடா இது என்று சோர்ந்து, மனம் தளர்ந்து போய் இருக்கும் நிலைமையில் கூட இந்த தானம் செய்யும் பொழுது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

பலரும் மருத்துவமனைகளை நாடி ஓடி அலைந்து மனதளவில் வெறுத்து போய் இருப்பார்கள். உணவு முறை மாற்றமும், உடல் உழைப்பு குறைவதாலும், இறை சிந்தனை இல்லாததாலும், கர்ம பாவங்களாலும் ஒரு மனிதனுக்கு புத்திர பாக்கியம் தடைபடுகிறது. பிள்ளை பேரு என்பது எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. கருவில் சிசு என்னும் விதை முளைப்பதற்கு, விதை தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. விதைகள் தான் விருட்சமாகிறது. விதைகள் தான் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. விதையின்றி மரம் இல்லை, மரம் இன்றி மழையும் இல்லை, மழையின்றி நீரும் இல்லை, நீரின்றி உயிரும் இல்லை. இந்த விதைகளை நீங்கள் தானம் செய்வதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.

கோவில் கோவிலாக ஏறி இறங்கி கிடைக்காத பலன்களும் விதை தானம் செய்வதன் மூலம் எளிதாக நிச்சயம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்கள் முதலில் குழந்தை இல்லையே என்கிற நினைப்பை மனதில் இருந்து அகற்ற வேண்டும். பொறுமையாக ஒவ்வொரு நாளும் மனதார இறைவனிடம் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். இறையருள் இல்லையேல் எதுவும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

- Advertisement -

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் உங்களால் முடிந்த அளவிற்கு வஸ்திர தானம் செய்து வாருங்கள். அமாவாசை அன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை தானம் செய்து வாருங்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நல்ல விதைகளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். செழித்து வளரக்கூடிய எந்த விதைகளும் தானத்திற்கு உகந்தவை. விதைகளை நட்டு செடியாக்கி மரமாக்கி வளர்ப்பவர்களுக்கு, இந்த விதைகளை தானம் செய்ய வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்து விடாதீர்கள். விதைகளை வீணாக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
கொடுத்த கடனை திரும்பவும் பெற பரிகாரம்

விவசாயிகள், தோட்டம் வைத்திருப்பவர்கள், மரம் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுபவர்கள் போன்றவர்களுக்கு இந்த தானத்தை செய்து வர வேண்டும். நீங்களும் விதைகளை நட்டு மரங்களை வளர்க்கலாம். கோவில் சார்ந்த இடங்கள், கோவில் பிரகாரங்களுக்குள் கோவிலுக்கு உகந்த விதைகளை போட்டு வளர்த்து வாருங்கள், இது இன்னும் பெரிய நன்மைகளை கொடுக்கும். இப்படி உங்களால் கொடுக்கப்பட்ட விதைகள் ஒன்றேனும் முளைத்து செழித்து வளர்ந்து வந்தால், உங்கள் வயிற்றிலும் நிச்சயம் சிசு தங்கும். பேசாத பேச்சுக்களையும், கேட்காத கேள்விகளையும் சகித்துக் கொண்ட உங்களின் நல் உள்ளங்களுக்கு சிறு விதை உள்ளம் குளிர, வயிற்றில் பாலை வார்க்கும் செய்தி தரும்.

- Advertisement -