ஒரு சிலர் தன்னுடைய பணத்தை, அடுத்தவர்களை நம்பி கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சிலர் பணத்தை கடனாக கொடுத்திருக்கலாம், அல்லது தொழிலில் முதலீடு செய்திருக்கலாம் அல்லது நம்பி சீட்டு போட்டு ஏமாந்து இருக்கலாம். இதேபோல நகை, சொத்து பத்திரம், இப்படி உங்களுக்கு சொந்தமான பொருட்களை நீங்கள், வெளியாட்களிடம் கொடுத்து ஏமாந்து இருந்தாலும், அதையெல்லாம் திரும்பவும் மீட்டெடுப்பதற்கு உண்டான பரிகாரம்தான் இது.
இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை செய்ய வேண்டும். வீட்டிலேயே பூஜையறையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு வெற்றிலையில் 2 கிராம்பு, 1 கற்பூரம் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் இந்த பொட்டலத்தை வைத்துக்கொண்டு நான் இழந்த பணம் மீண்டும் என்னை வந்து சேர வேண்டும். நான் இழந்த நகை, இழந்த சொத்து எதுவாக இருந்தாலும் அது என் கைக்கு மீண்டும் வந்து சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.
உங்களுக்கு நீங்கள் இழுந்தது எது என்று தெரியும் அல்லவா. அது மீண்டும் உங்கள் கைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் இந்த பொட்டலத்தை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் அரசமரம் இருக்கும் இடத்திற்கு சென்று, ஒரு மண் அகல் விளக்கில் வெற்றிலையில் மடித்து வைத்திருக்கும் கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதில் நீங்கள் எடுத்துச் சென்ற 2 கிராம்பையும் போட்டுவிட்டு அரசமரத்தை மூன்று முறை வளம் வந்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் இழந்தது திரும்பவும் உங்கள் கையை வந்து சேரும். சனிக்கிழமை பகல் 12 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அந்த வெற்றிலையை அப்படியே அந்த அரச மரத்துக்கு அடியில் வைத்து விட்டு வரலாம். இவ்வளவுதான் பரிகாரம்.
இந்த பரிகாரத்தை ஐந்து அல்லது ஏழு வாரங்கள் செய்வதற்கு முன்பாகவே நீங்கள் நம்பி, அடுத்தவர்களுக்கு கொடுத்த பணம் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். கடன் கொடுத்து ஐந்து வருடம் ஆகிறது, ஏழு வருடம் ஆகிறது என்னுடைய சொந்தம் என்றுதான் நம்பி கொடுத்தேன். ஆனால் மீண்டும் அவர்கள் வட்டியும் தரவில்லை எனக்கு வரவேண்டிய அசல் தொகையும் வந்து சேரவில்லை, என்று புலம்புபவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஏகாதசி பெருமாள் மந்திரம்
உங்களுடைய வீட்டு பக்கத்தில் அரசமரம் இல்லை என்றால், தேடிப் பிடித்து அரச இலையை கொண்டு வந்து, வீட்டிலேயே வைத்து அதன் மீது மண் அகல் விளக்கை வைத்து அதில் கிராம்பையும் கற்பூரத்தையும் வைத்து கொளுத்துங்கள். அரச இலை கிடைக்கவில்லை என்றால், ஒரு தாம்பூல தட்டில் மண் அகல் விளக்கை வைத்து கற்பூரத்தோடு கிராம்பை சேர்த்து எரித்துக் கொள்ளலாம். ஐந்து சனிக்கிழமை தொடர்ச்சியாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.