- Advertisement -
சமையல் குறிப்புகள்

புல்டோசரை உங்க கால் மேலே ஏற்றினால் கூட எலும்பு உடையவே உடையாது. காலம் பூராவும் முட்டி வலி இல்லாமல் ஆரோக்கியமா நடக்கணுமா? தினமும் 1 டம்ளர் இந்த பால் குடிங்க போதும்.

- Advertisement -

மூட்டு வலி வரக்கூடாது. எலும்புகள் வலுவிழக்க கூடாது. காலம் முழுவதும் ஆரோக்கியமாக நடக்க வேண்டும். சத்து நிறைந்த கட்டுக்கோப்பான உடலை பெற வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் தினமும் இந்த பால் குடிக்க வேண்டும். அது எந்த பாலாக இருக்கும். உங்களால கெஸ் பண்ண முடியுதா? கெஸ் பண்ண முடிஞ்சா, முதலில் அந்த பால் என்ன என்பதை யோகித்துவிட்டு பிறகு பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும்தான் இந்த பதிவு. ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் ரெசிபியை படித்து பலன் பெறலாம்.

இன்னைக்கு நாம பார்க்கப் போற ரெசிபி கேழ்வரகு பால் எப்படி எடுப்பது. அந்த பாலில் இருந்து சத்து நிறைந்த கஞ்சி எப்படி காய்ச்சுவது? 6 மாத குழந்தையிலிருந்து 60 வயது பாட்டி வரைக்கும் இந்த கஞ்சியை குடிக்கலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை பார்த்து விடுவோம்.

- Advertisement -

செய்முறை

நாளைக்கு காலையில் இந்த கஞ்சி காய்ச்ச வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவே ஒரு சிறிய கிண்ணத்தில் 4 ஸ்பூன் கேழ்வரகு போட்டு, நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துவிட்டு, குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து ஒரு மூடி போட்டு ஓரமாக வைத்து விடுங்கள். மறுநாள் காலை மீண்டும் ஊற வைத்த கேழ்வரகை 2 முறை கழுவி தண்ணீரை வடித்து விடுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த கேழ்வரகை போட்டு தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றி உங்களால் எவ்வளவு தூரம் அறைக்க முடியுமோ, அவ்வளவு நைசாக இதை மிக்ஸி ஜாரில் அரைத்து விட வேண்டும். அதன் பின்பு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து பால் எடுக்கலாம். இல்லையென்றால் இரண்டு லேயர் உள்ள வடிகட்டியில் இதை ஊற்றி நன்றாகப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். (தேவைப்பட்டால் இந்த கேழ்வரகுடன் இரண்டு துண்டு தேங்காய் பத்தையை போட்டு அறைத்து கூட பால் எடுக்கலாம் அது நம்முடைய சௌகரியம்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அடுப்பை பற்ற வைக்க வேண்டாம். அந்த பாத்திரத்தில் தயாராக இருக்கும் கேழ்வரகு பால் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் இதில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பாலை காய்ச்ச காய்ச்சக் கட்டியாக தொடங்கும்.

தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு அதன் பிறகு, இதில் ஒரே ஒரு சிட்டிகை உப்பு போட்டு, இனிப்பு சுவைக்கு தேவையான அளவு பனங்கற்கண்டு, நாட்டு சக்கரை, கருப்பட்டி இதில் ஏதாவது ஒன்றை தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து, அடுப்பை பற்ற வைத்துவிட்டு, மிதமான தீயில் கைவிடாமல் இந்த கலவையை கலந்து கொடுக்க வேண்டும். கஞ்சி கொதி வந்து லேசாக திக்காக தொடங்கும். மூன்று நிமிடத்தில் ராகி பால் நன்றாக வெந்து கஞ்சியாக மாறி விடும்.

- Advertisement -

அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் கஞ்சி காய்ச்ச வேண்டும் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கொழ கொழப்போடு கஞ்சி தயாராகி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிய பவுலில் மாற்றி நன்றாக ஆறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆறு மாத குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால் இந்த கஞ்சியை காய்ச்சும் போது கவனத்தோடு காய்ச்ச வேண்டும். (குழந்தைகளுக்கு இந்த கஞ்சியை காய்ச்சினால் தேங்காய் சேர்க்கக்கூடாது).

கஞ்சி காய்ச்சும் போது ரொம்பவும் திக்காகுது என்றால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கூட கலந்து, கொஞ்சம் லிக்விடாக கஞ்சி காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அது எளிதில் ஜீரணம் ஆகும்.

கொஞ்சம் பெரியவர்களுக்கு காய்ச்சுவதாக இருந்தால், இந்த கேழ்வரகு பாலோடு, பசும்பால் சேர்த்தும் கலந்து கொடுத்து கஞ்சி காய்ச்சலாம். உடலுக்கு ஆரோக்கியம் தான். உங்களுக்கு இதில் இனிப்பு சேர்க்க பிடிக்கவில்லை என்றால் வெறும் உப்பு சேர்த்து கூட கஞ்சி காய்ச்சி குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சுவை அவரவருடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: எலும்புகளுக்கு சத்து சேர்க்கும் கேழ்வரகு மாவில் அல்வாவை இப்படி செய்து பாருங்கள். பக்குவம் தவறவே தவறாது. ருசியும் அமோகமாக இருக்கும்.

மாதவிடாய் சமயத்தில் அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள் கட்டாயம் இந்த கஞ்சியை குடிக்கலாம். குழந்தையிலிருந்து பெரியவர் வரை, இந்த கஞ்சி குடிக்கலாம். குழந்தைக்கு, பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கலாம். இப்படி யார் வேண்டுமென்றாலும் இந்த கஞ்சியை குடிக்கலாம். ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -