
எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நமது மதிப்பை இந்த சமுதாயத்தில் உயர்த்திக் கொள்வதென்பது கடினமாக மாறி விடுகிறது. பணம் படைத்தவன் மட்டுமே இந்த சமுதாயத்தில் பெருமைமிக்கவனாக இருக்க முடிகிறது. பணம் இல்லாதவர்களின் பேச்சை மற்றவர்கள் மதிப்பது கூட கிடையாது. பணம் வைத்திருப்பவர் நல்லவரோ, கெட்டவரோ என்பதை எவரும் பார்ப்பதில்லை. அவனிடம் பணம் இருக்கிறது பணத்தை வைத்து அவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதனால் அவர்களின் பின்னால் மக்கள் கூட்டம் செல்கிறது. இவ்வாறு இந்த காலம் பணத்தை வைத்துதான் ஒரு மனிதனை எடை போடுகிறது. எனவே இந்த பணத்தை சம்பாதிப்பதை விட அதனை எப்படி பல மடங்காகப் பெருக்குவது என்பதில் தான் அனைவரின் கவனமும் இருக்கிறது. இதற்கு நமக்கு அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. இந்த அதிர்ஷ்டத்தை நம்மிடம் கொண்டு வர வெண்பூசணிக்காய் வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பூசணிக்காய் என்றால் அதனை மாதம்தோறும் அமாவாசை அன்று கடைகளுக்கும், வீடுகளுக்கும் சுற்றிப் போட்டு வாசலில் உடைப்பதுண்டு. அதுமட்டுமல்லாமல் கல்யாணம் என்றாலே அதில் பூசணிக்காய் சாம்பார் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு பூசணிக்காயை நமது அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிச்சயம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.
பூசணிக்காய் என்பது அதிர்வலைகளை தன்னுள் வாங்கி கொள்ளும் ஆற்றல் படைத்தது. எனவே தான் எதிர்வினைகளை அழிப்பதற்கு பூசணிக்காய் வைத்து சுற்றி போட்டு அதனை உடனே உடைத்து விடுகிறோம். அதுபோல நேர்மறை அதிர்வலைகளையும் இதனால் உட்கிரகிக்க முடியும். எனவே இந்த பூசணிக்காயை வைத்து அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ஒரு பரிகாரம் செய்வதன் மூலம் ராஜ யோகத்தை பெற முடியும்.
அதற்காக முதலில் பவுர்ணமி அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரமன்று ஒரு பூசணிக்காய் வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு அதில் இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து அவற்றை பன்னீரில் கழுவி, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இதற்காக கடையில் வெற்றிலை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையின் முன் அமர்ந்து கொண்டு, முதலில் ஒரு வெற்றிலையின் மீது ஒரு பூசணி விதை, மற்றும் ஒரு சிட்டிகை வெல்லம் வைக்க வேண்டும். பிறகு இரண்டு வெற்றிலை, இரண்டு பூசணி விதை, ஒரு சிட்டிகை வெல்லம் வைக்க வேண்டும். இவ்வாறு அடுத்ததாக 3 வெற்றிலை, 3 பூசணி விதை, ஒரு சிட்டிகை வெல்லம் வைக்க வேண்டும்.
இவ்வாறு நான்கு, ஐந்து என்று எட்டு வெற்றிலை, எட்டு பூசணி விதை, ஒரு சிட்டிகை வெல்லம் என்று ஒவ்வொன்றின் மீதும் ஒன்றாக அடுக்கி வைக்க வேண்டும். பிறகு கண்களை மூடி உங்கள் இஷ்ட தெய்வத்திடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நான் எனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், எனது தொழில் சிறப்புடன் நடக்கவேண்டும், லாபம் கிடைக்க வேண்டும், பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இந்த அனைத்து பொருட்களையும் ஒரு வாழை இலையில் மடித்து, அதனை பசுமாட்டிற்கு உணவாக கொடுத்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்துவர உங்களிடம் பணம் பல மடங்கு பெருகி ராஜயோகம் கிடைப்பது உறுதி.