- Advertisement -
- Advertisement -

ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் ஐஸ்வர்யம் இருக்காது. ஐஸ்வர்யம் இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் இருக்காது. ஐஸ்வர்யமும் ஆரோக்கியமும் சேர்ந்து இருக்கும் இடத்தில், காரிய சித்தி இருக்காது. பணம் இருக்கு, உடம்பில் தெம்பு இருக்கு, ஆனா எந்த வேலையிலும் சில பேரால் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இப்படி இந்த ஆரோக்கியம் ஐஸ்வரியம் காரிய சித்தி மூன்றையும் ஒரு சேர ஒரு மனிதன் பெற வேண்டும் என்றால் ராஜராஜேஸ்வரி வழிபாட்டை தினம் தோறும் செய்ய வேண்டும்.

ராஜராஜேஸ்வரியால் மட்டும்தான் இந்த விஷயத்தை உங்களுக்கு வரமாக கொடுக்க முடியும். உலகத்தை காக்கும் அம்பாள் ராஜராஜேஸ்வரி. அவளின் பிள்ளைகள்தான் நாம் எல்லோரும். தாயிடம் என்ன வரும் கேட்டாலும் அது சுலபமாக கிடைத்துவிடும் அல்லவா. அவளை நினைத்து தினமும் சொல்ல வேண்டிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இந்த ராஜராஜேஸ்வரி வாராகியின் சொரூபம் என்றும் சொல்லுவார்கள். தற்போது ஆஷாட நவராத்திரி ஆனது நடந்து கொண்டிருக்கிறது அல்லவா. இந்த நாளில் ராஜராஜேஸ்வரியை நினைத்து ஒரு நாளாவது இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் காரிய தடை விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வருமானத்தில் இருக்கக்கூடிய தடை நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபட கூடிய பாக்கியம் கிடைக்கும்.

ஜூன் மாதம் 26 ஆம் தேதி துவங்கிய இந்த ஆஷாட நவராத்திரி ஜூலை மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த மந்திரத்தை சொல்லுவது, அதிசக்தி வாய்ந்த பலனை தரும். ஆஷாட நவராத்திரி முடிந்த பின்பும், தினமும் காலையில் எழுந்து இந்த மந்திரத்தை சொல்லாம் தவறு ஒன்றும் கிடையாது, வாழ்க்கையில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடைவதற்கு அம்பாள் அருள் புரிவாள்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, “ராஜராஜேஸ்வரி மாதா நமஸ்காரம்” என்று மூன்று முறை சொல்லுங்கள். பிறகு பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.

ராஜராஜேஸ்வரி அம்பாள் மந்திரம்

ஆரோக்கியம், ஐஸ்வரியம், இஷ்ட சித்தி தேஹிமே!

- Advertisement -

ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இஷ்ட சித்தி என்பது, காரிய சித்தியை குறிக்கிறது. நம் மனதில் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும். ஆக இந்த மூன்றையும் எனக்கு வரமாக கொடுக்க வேண்டும் என்று ராஜராஜேஸ்வரியிடம் பணிவோடு கேட்கின்றோம். இந்த ராஜராஜேஸ்வரி அம்பாளை மனதில் நினைத்து, இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்லிவிட்டு, வீட்டில் இருந்து வெளியே கிளம்புங்கள். உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள்.

அந்த நாள் இனிமையான நாளாக அமையும். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஆரோக்கியமாக ஐஸ்வரியம் காரிய சித்தி இது மூன்றும் ஒரு சேர கிடைத்துவிட்டால் போதும். அவன் வாழ்க்கையில் பெருசாக பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஆனால் ஒரு மனிதருக்கு இந்த மூன்று விஷயங்களும் கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு 2-7-2025

உங்களுடைய கர்ம வினைகள் குறைந்து, நாளுக்கு நாள் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் குறைந்து செல்ல வேண்டும் என்றால், இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடும், இந்த அம்பாள் மந்திரமும் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பலனடையலாம்.

- Advertisement -