- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த தீபாவளிக்கு ரவையை வைத்து குண்டு குண்டு சாப்டான குலாப் ஜாமுன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

- Advertisement -

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை அத்துடன் சேர்த்து இந்த குலோப் ஜாமுனும் ஸ்பெஷல் தான். மற்ற நேரங்களை விட இப்போதெல்லாம் தீபாவளி பண்டிகையின் போது தான் குலோப் ஜாமுனை அதிக அளவில் செய்கிறார்கள். அதே போல் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றாலும் குலோப் ஜாமுன் மாவை வாங்கி உடனடியாக செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் இனி அந்த இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் இந்த ரவையை மட்டும் வைத்தே ஒரு சூப்பரான சாஃப்ட்டான குலோப் ஜாமுன் செய்ய முடியும் என்றால் இனி பண்டிகை நாட்கள் விசேஷம் என்று வந்தால் தான் செய்ய வேண்டுமா என்ன நினைத்த நேரமெல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே. அந்த ரவை குலோப்ஜாம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: ரவை -1 டம்ளர், பால் -3 டம்ளர், நெய் – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை -2 டம்ளர், தண்ணீர் -2 டம்ளர், ஏலக்காய் – 1 பின்ச், குங்குமப்பூ – 1 பின்ச், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து விடுங்கள். பேனை வைத்து நன்றாக சூடான உடன் அதில் ரவையை சேர்த்து விடுங்கள். அதன் பிறகு நெய்யும் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். ரவையின் நிறம் மாறக்கூடாது வாசம் வரும் வரை வறுத்தாலே போதும். பிறகு வறுத்தெடுத்த ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் குலோப் ஜாமுன் பதம் நன்றாக இருக்கும்.

இப்போது மீண்டும் அதே பேனை வைத்து வறுத்த அரைத்த ரவையை அதில் சேர்த்து ஒரு டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள் பாலும் ரவையும் சேர்த்து நன்றாக உருண்டு வரும் பதம் வரை கிண்ட வேண்டும். அதாவது பேனில் ஒட்டாமல் சுருண்டு வர வேண்டும் அது தான் சரியான பதம். அதன் பிறகு ஒரு நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இன்னொரு பேனில் ஒரு இரண்டு டம்ளர் சக்கரைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி சக்கரை கரையும் வரை கொதிக்க விடுங்கள். இதில் ஒரு பின்ச் ஏலக்காயும் ஒரு பின்ச் குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை எல்லாம் கரைந்து அதில் பபுள்ஸ் வரும் வரை வைத்திருந்து, பின் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு பாகை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் பாகு கெட்டி படாது. அது மட்டும் இன்றி குலோப் ஜாமுன் மீது சர்க்கரை படிந்து நற நறவென்று இருக்காது.

இப்போது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருக்கும் போதே அந்த ரவையும் பாலும் சேர்ந்து அந்த மாவை உருண்டை பிடித்து (குளோப் ஜாமுன் போல) இந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்த பிறகு சக்கரைப்பாகில் போட்டு விடுங்கள். சக்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது ஜாமூன்களை போட்டு எடுங்கள்.

இதையும் படிக்கலாமே:  ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? மாலை நேர ட்ரெண்டிங் ஸ்நாக்ஸ்க்கு இத அடிச்சுக்க முடியுமா?

ரவையும் பாலும் மட்டுமே வைத்து சூப்பரான ஒரு குலோப் ஜாமுன் ரெடி. அப்புறம் என்ன இனி பண்டிகை வந்தால் மட்டும் இல்லை நினைத்த நேரம் எல்லாம் இந்த குளோப் ஜாமூனை செய்து விடலாம்.

- Advertisement -