- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கழுத்து கருமை நீங்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

- Advertisement -

பொதுவாக முகத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு கழுத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றே தான் கூற வேண்டும். ஒரு சிலர் மட்டுமே முகத்தை பராமரிப்பது போல் கழுத்தையும் பராமரிப்பார்கள். அதனால் முகத்தில் இருக்கும் நிறத்தை விட கழுத்தில் இருக்கும் நிறம் சற்று கருமையாகவே தென்படும். இந்த கருமையை போக்குவதற்கு எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

மேக்கப் போடுபவர்களும் சரி, முகத்திற்கு ப்ளீச்சிங், ஃபேஸ் க்ரீம் என்று முகத்தை அழகு படுத்துவதற்காக செய்யக்கூடிய முறைகளும் சரி இவற்றை கழுத்திற்கு சேர்த்து செய்வது கிடையாது. ஏன் சிலர் குளிக்கும் பொழுது முகத்திற்கு இரண்டு மூன்று முறை சோப்பு போட்டு தேய்த்து கழுவுவார்கள். ஆனால் கழுத்திற்கு ஒரு முறை நன்றாக தேய்த்து கழுவுவது பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதனாலேயே கழுத்தின் நிறம் மாறிவிடும்.

- Advertisement -

இப்படி மாறுவதால் ஒருவரின் தோற்றமே வித்தியாசமாக தெரியும். முகம் மட்டும் பளிச்சென்று வெள்ளையாகவும் முகத்திற்கு கீழ் இருக்கும் கழுத்து கருமையாகவும் தென்படும். சிலருக்கு நகைகளின் காரணமாக அலர்ஜித்தன்மை ஏற்பட்டு கழுத்து கருப்பாகும். எதனால் கழுத்து நிறம் மாறினாலும் இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது அதன் நிறம் சரியாகும்.

முதலில் நாம் கழுத்தில் இருக்க கூடிய அழுக்குகளை நீக்க வேண்டும். அதற்கு சுத்தமான காய்ச்சாத பசும்பால் தேவைப்படும். பசும்பால் கிடைக்காதவர்கள் பாக்கெட் பாலை உபயோகப்படுத்தலாம் என்றாலும், பசும்பாலில் இருக்கக்கூடிய அளவுக்கு பலன்கள் பாக்கெட் பாலில் கிடைக்காது என்று கூறலாம். ஒரு கிண்ணத்தில் பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பஞ்சு உருண்டையை நனைத்து கழுத்தில் நன்றாக கீழ் இருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த பஞ்சில் கழுத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் வருவதை பார்க்க முடியும்.

- Advertisement -

இவ்வாறு செய்த பிறகு ஈரத் துணியை வைத்து கழுத்தை துடைத்தெடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரால் கழுவலாம். அடுத்ததாக வீட்டில் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெள்ளை ஓட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த ஓட்ஸ் பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கலந்து கழுத்தில் தடவ வேண்டும்.

இவ்வாறு தடவும் பொழுது கீழிருந்து மேலாக தான் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு அது நன்றாக உலர்ந்த பிறகு கைகளால் நன்றாக மசாஜ் செய்து ஸ்கிரிப் செய்வது போல் நன்றாக தேய்த்து விட்டு கழுவ வேண்டும். இந்த ஓட்ஸ் சிறந்த ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்படுவதால் கருமையை நீக்குவதற்கு உதவும்.

- Advertisement -

அடுத்ததாக இவ்வாறு செய்து முடித்த பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்து முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். பிறகு இவை நன்றாக உலந்தபிறகு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்பொழுது முகத்தையும், கழுத்தையும் பாருங்கள். முன்பிருந்ததை விட கழுத்து பிரகாசமாக தெரிவதை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: வறண்ட சருமத்தால் ஏற்ப்படும் பாதிப்புகள் நீங்க பாலாடை

இந்த வழிமுறைகளை வாரத்தில் மூன்று நாட்கள் என்ற வீதம் பயன்படுத்தி வருவதன் மூலம் கழுத்தில் இருக்க கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கி முகத்தை போல் கழுத்தும் பிரகாசமாகவும், அழகாகவும் திகழும்.

- Advertisement -