நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கிறது. அந்த சருமத்திற்கு ஏற்றார் போல் நாம் நம்முடைய முகத்தை பராமரித்துக் கொள்ள வேண்டும். மாறாக வேறொரு சருமத்திற்குரிய பராமரிப்பு முறையை பின்பற்றினால் அதனால் நம்முடைய சருமத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படும். அந்த வகையில் இன்று வறண்ட சருமம் இருப்பவர்கள் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் அவர்கள் முகம் புத்துணர்ச்சியுடன் திகழும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இயற்கையிலேயே நம்முடைய தோலில் சில எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அந்த எண்ணெய் சுரப்பிகளில் அதிகமாக எண்ணெய் சுரந்தால் அது எண்ணெய் சருமம் என்று கூறப்படுகிறது. இயல்பாக சுரக்க வேண்டிய எண்ணெய் சுரக்காமல் இருந்தால் அதை வறண்ட சருமம் என்று கூறுவோம். இவ்வாறு வறண்ட சருமம் ஏற்படும் பொழுது விரைவிலேயே வயது முதிர்ச்சி தன்மை ஏற்பட்டு விடும்.
அதுமட்டுமில்லாமல் விரைவிலேயே முக சருமம் என்பது பாதிப்பிற்கு ஆளாகிவிடும். மேலும் பளபளப்பு அல்லது பிரகாசம் என்பது முகத்தில் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய முகத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலே விரைவிலேயே அவர்களுடைய வறண்ட சருமம் மறைந்து மிருதுவான இளமையான சருமம் கிடைக்கும்.
மேலும் இந்த பாதிப்பு அதிகமாக வயதானவர்களை தான் பாதிக்கிறது. வயதாக வயதாக ஒருவருடைய தோலில் இருக்கக்கூடிய எண்ணெய் சுரப்பிகளின் அளவு குறைய ஆரம்பிப்பதால் தான் அவர்களுக்கு வயது முதிர்ச்சி, தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் அதிக அளவில் சுடு தண்ணீரில் குளிப்பவர்களுக்கும் வறண்ட சருமம் என்பது ஏற்படும்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது ஒன்றுதான் பாலாடை. ஆம் நாம் தினமும் பால் காய்ச்சுவோம் அல்லவா? அப்பொழுது அதன் மேல் படரக்கூடிய ஏடை தான் பாலாடை என்று சொல்கிறோம். இதை தனியாக சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பாலாடையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக டேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை வறண்ட சருமம் இருப்பவர்கள் அவர்கள் முகத்தில் நன்றாக தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு தங்கள் கைகளால் நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் பொழுது அந்த பாலாடையில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையானது நம் முகத்தில் படர்ந்து விடும். அதனால் முகத்தில் இருக்கக்கூடிய வறண்ட தன்மை நீங்கி முகத்தில் ஒருவித பளபளப்பு தென்படும்.
இதையும் படிக்கலாமே: ஒரே மாதத்தில் முடி கருகருன்னு காடு போல அடர்த்தய வளர பெஸ்ட் பேக். நீங்களும் டிரை பண்ணி பாருங்க.
இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் வறண்ட சருமம் நீங்கி முகம் இளமையுடனும், பிரகாசத்துடனும், பளபளப்பாகவும் தென்படும்.