- Advertisement -
சமையல் குறிப்புகள்

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு மசாலாவை ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயும் செய்ய முடியும்

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் பொதுவாகவே குழந்தைகள் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது தான். வீட்டில் என்ன தான் பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு ஹோட்டலில் செய்யும் சுவை மிகவும் பிடித்தமானதாக உள்ளது. ஹோட்டலில் உணவுகளின் ருசியைப் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் வீட்டில் அவ்வாறு சாப்பிடுவதில்லை. இவ்வாறான குழந்தைகளுக்கு ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் வீட்டிலேயும் பக்குவமாக சமைத்து கொடுத்தால் மிகவும் விருப்பமாகவும், மகிழ்ச்சியாகவும் சாப்பிடுவார்கள். அவ்வாறு சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு மசாலாவை, ரெஸ்டாரண்ட்டில் செய்யயும் அதே சுவையில் வீட்டிலேயும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 15 பல், இஞ்சி சிறிய துண்டு – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 1, காஷ்மீரி சில்லி பவுடர் – ஒன்றரை ஸ்பூன், தனியாத் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அதனை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மறுபடியும் ஒருமுறை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, இவை சூடானதும் இவற்றுடன் சோம்பு, சீரகம், ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் தனியாத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதங்கிய பின்னர், தண்ணீர் ஊற்றி அனைத்தையும் கலந்து விட்டு, குக்கரை மூடி, விசில் போட்டு, அடுப்பை வேகமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவேண்டும். பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி கலந்து பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயாராகிவிடும்.

- Advertisement -