- Advertisement -

சாதம் வடிக்கும் போது பெண்கள் பின்பற்ற வேண்டியவை

- Advertisement -

ஒரு வீட்டின் பெண்கள் எப்போதுமே மகாலட்சுமியின் அம்சம் தான். ஒரு வீட்டில் பெண்கள், சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் நிலையாக இருக்கும். மகாலட்சுமியின் ஸ்வரூபமான பெண்கள் தினம் தோறும் வீட்டில், சாதம் வடிக்கும் போது, இந்த ஒரு விஷயத்தை மட்டும் பின்பற்றி பாருங்கள்.

உங்களுடைய வீட்டில் சந்தோஷத்திற்கு நிகராக, பொன் பொருள் தனம் தானியமும் ஊற்றெடுக்கத் தொடங்கி விடும். எல்லா செல்வ வளமும் உங்களுடைய வீட்டில் நிரம்பி வழியும். இதற்கு பெண்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சாதம் வடிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்பு

தினமும் நம் எல்லோர் வீட்டிலும் சாதம் வடிப்போம். அன்னலட்சுமியான அரிசியை எடுத்து, சமைக்க பயன்படுத்தும் போது, அன்னபூரணி தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு, சமைப்பதற்காக அரிசியை எடுக்க வேண்டும். “அன்னபூரணியே நமஹ” என்ற மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது.

அரிசியை வழக்கம் போல ஊறவைத்து கழுவி அடுப்பில் வைக்கும் போது, அன்னபூரணி தாயை மனதில் நினைத்துக் கொண்டு, இன்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லபடியாக இந்த உணவை சாப்பிட வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு அடுப்பில் சாப்பாட்டு பானையை வைக்கவும். குக்கரில் சாப்பாடு வைத்தால் கூட நீங்கள் இந்த வேண்டுதலை வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

சாப்பாடு அன்னபூரணி. கல் உப்பு மகாலட்சுமி. இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து, சமைக்கும் போது, நாம் நினைத்து விட்டால் போதும். நம்முடைய வீட்டில் தனம் தானியம் இரண்டிற்க்குமே குறைவு இருக்காது. சாதம் வடிவில் இருக்கும் அன்னபூரணியில், மகாலட்சுமி வடிப்பில் இருக்கும் கல் உப்பு சேர்த்து, வடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். சில பேர் வீடுகளில் சாப்பாடு வடிக்கும்போது கல் உப்பு போட மாட்டாங்க.

இதையும் படிக்கலாமே: இன்று 14-06-2025 அபிஜித் நட்சத்திர நேரம் விநாயகர் மந்திரம்

சாதத்தின் ரூபத்தில் அன்னபூரணியும், கல்லுப்பின் ரூபத்தில் மகாலட்சுமியும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு ஆசிர்வாதத்தை வழங்குவார்கள். சாதத்தில் கல் உப்பு போடுவது வெறும் ருசிக்காக மட்டும் கிடையாது. ஆன்மீக ரீதியாக இப்படி ஒரு காரணமும் இதில் மறைந்திருக்கிறது. நீங்களும் நாளை முதல் சாதம் வடிக்கும் போது மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் தன லாபம் அதிகரிக்க துவங்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்க துவங்கும். என்றுமே வீட்டில் அரிசி படிப்பிற்கு பஞ்சம் இருக்காது. என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by