இன்று இரவு அப்படி என்ன அபூர்வமான அதி விஷேசம் இருக்கிறது. இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி. இன்று இரவு 12 மணியை தாண்டினால், ஆனி 1ஆம் தேதி, தமிழ் முதல் நாள் பிறக்கவிருகின்றது. இன்று சனிக்கிழமை. இவ்வளவு தானே நமக்கு தெரியும். ஆனால் இன்று இரவு சங்கடஹர சதுர்த்தியோடு சேர்த்து அபிஜித் நட்சத்திர நேரமும் வரவிருக்கிறது. இந்த நாளில் கடன் தொல்லையிலிருந்து விடுபட, நாம் சொல்ல வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த கணபதி மந்திரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சங்கடஹர சதுர்த்தி என்றாலே சங்கடங்களில் இருந்து விடுவிக்கக் கூடிய நாள் என்பது அர்த்தம். இந்த நாளில் வந்திருக்கும் அபிஜித் நட்சத்திர நேரத்தில், கடன் என்னும் சங்கடத்திலிருந்து விடுபட வேண்டும் என்று, விநாயகரை வேண்டிக் கொண்டால், உங்களுடைய கடன் சுமையானது படிப்படியாக குறையும். இன்று இரவு அபிஜித் நட்சத்திர நேரம் எப்போது வருகிறது. கடன் தீர எந்த மந்திரத்தை உச்சரிப்பது. ஆன்மீகம் சார்ந்த சில எளிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
ஜூன் மாதம் அபிஜித் நட்சத்திர நேரம்
இன்று 14-6-2025 நள்ளிரவு 12:09 மணியிலிருந்து 12:33 மணி வரை அபிஜித் நட்சத்திர நேரம். இதை நாம் சரியாக கணக்கு பார்த்தால், நள்ளிரவு 12 மணிக்கு பிறகு 15 ஆம் தேதி பிறந்து விடுகிறது. 15 ஆம் தேதி அதிகாலை என்றும் இதை சொல்லலாம். அதாவது ஆனி மாதம் துவக்கத்தின் நேரம் என்று வைத்துக் கொள்ளலாம். எப்படியோ உங்களுக்கு நேரம் புரிந்ததா.
இந்த நேரத்தில் அலாரம் வைத்து சரியாக கண்விழித்துக் கொள்ளுங்கள். பிள்ளையாரப்பா என்னுடைய கடனை கொஞ்சம் தீர்த்து வையப்பா என்று மட்டும் சொன்னால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. பிறகு நீங்கள் தூக்கத்தில் இருந்தால் கூட பரவாயில்லை. விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை 24 முறை சொல்லிவிட்டு, கண்களை மூடி தூங்கி விடுங்கள். இந்த 24 நிமிடத்தில் இந்த பிரபஞ்சத்திடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது பலிக்கும்.
அந்த நேரத்தை நாம் தவற விடக்கூடாது. அதற்காகத்தான் நடுராத்திரியாக இருந்தாலும் பரவாயில்லை கடன் தீர இந்த முயற்சியை மேற்கொள்ளுவோம். நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்னும் சங்கடம் நம்மை விட்டு விலக இந்த பிரபஞ்சம் நமக்கு உதவி செய்யும். இன்றைய தினம் கடன் தீர சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம் இதோ.
ருண விமோசன மந்திரம்
ருண விமோசன வல்லபாய ஹ்ரீம்
கம் கணபதயே ஸ்வாஹா
இதையும் படிக்கலாமே: கணபதி மாலா மந்திர வரிகள்
இவ்வளவுதான். எளிமையான இரண்டு வரி மந்திரம். இதை நீங்கள் இன்று இரவு வரக்கூடிய குறிப்பிட்ட 24 நிமிடத்தில், அபிஜித் நட்சத்திர நேரத்தில், இந்த மந்திரத்தை தவறாமல் சொல்லிப் பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். அதற்கு அந்த விநாயகர் தான் பொறுப்பு. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ள படி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.