- Advertisement -

சம்பளம் வாங்கியதும் செய்ய வேண்டியது

- Advertisement -

சம்பள பணம் கைக்கு வருவதற்கு முன்னரே நிறைய கமிட்மெண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விடுகிறோம். பின் கையில் இருக்கும் மிச்ச மீதியை வைத்துக் கொண்டு தான் வாழ்க்கையை ஓட்டும் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பவர்கள், பணம் வீண் விரயம் ஆகாமல் உங்களிடம் அதிகமாக சேர்ந்து கொண்டே செல்வதற்கு இந்த 2 விஷயங்களை சம்பளம் வாங்கியதும் செய்ய மறக்காதீர்கள்! சம்பளம் வாங்கியதும் செய்ய வேண்டிய முதல் இரண்டு விஷயங்கள் என்னென்ன? என்பதை ஆன்மீகம் சார்ந்த கண்ணோட்டத்தில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பணம் வீண் விரயமானால் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் கடினமாக ஓட வேண்டி இருக்கும். நாம் பட்ஜெட் போட்டபடி நம்முடைய செலவு கணக்குகள் இருப்பதில்லை. எவ்வளவு சிந்தித்து கூடுதலாக பட்ஜெட் போட்டு வைத்தாலும், பணம் திடீரென வீணாக விரயம் ஆகிவிட்டால் அவ்வளவுதான், நமக்கு டென்ஷன் தலைக்கு ஏறிவிடும்.

- Advertisement -

சம்பள பணத்தை கையில் கத்தையாக வாங்கினாலும் அது பத்து நாட்களுக்குள் காலண்டரை கிழிப்பது போல தேய்ந்து கொண்டே செல்லும். இப்படி இருப்பவர்கள் சம்பளம் வாங்கியதும் முதல் இந்த இரண்டு விஷயங்களை செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கை நிலை மாற ஆரம்பிக்கும். தனக்குப் போகத்தான் தானமும், தர்மமும் என்கிற வேதாந்தம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மால் முடிந்தவற்றை தானம் செய்தால் தான் நம்மிடம் இருக்கும் பணம் மென்மேலும் சேரும் என்பது தான் பிரபஞ்ச உண்மை.

அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மனம் உள்ளவர்களுக்கு தான் பணமும் சேரும். தவறான வழியில் பணம் சம்பாதித்தாலும், அதில் பாதியை கொண்டு போய் உண்டியலில் போட்டுவிட்டு வருவார்கள். பாவ கணக்குகளை இப்படியும் சிலர் கழித்து விடுகிறார்கள். ஆக தானம் செய்பவர்களுக்கு பணமும் சேரும் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

சம்பளம் வாங்கியதும், சம்பள பணத்திலிருந்து முதல் வேலையாக இல்லாத ஏழை ஒருவருக்காவது உணவினை தானம் செய்யுங்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஒருவர் பசியால் வாடும் பொழுது அவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்தால், அவரின் வயிறு குளிர்ச்சி அடைந்து, மனதார உங்களை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த நினைப்பு தான் உங்களிடம் மென்மேலும் பணத்தை சேர்க்க வைக்கும் என்கிறது சாஸ்திரங்கள். நாலு இட்லியும், ஒரு பாட்டில் தண்ணியும் வாங்கி கொடுங்கள் போதும், பெரிதாக நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாதம் ஒருமுறை இதை கூட நீங்கள் தானம் செய்ய முடியாத அளவிற்கு இருக்கிறீர்கள்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
நாளை 14-03-2025 மகாலட்சுமி ஜெயந்தி.

இரண்டாவதாக வளரும் பொருட்களை அல்லது பொங்கக்கூடிய பொருட்களை வாங்க வேண்டும். சம்பளம் வாங்கியதும் அந்த பணத்தில் இருந்து அரிசி, பருப்பு, பால் அல்லது பூ, பூச்செடி போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம். பொங்கக்கூடிய அல்லது வளர்ந்து கொண்டே செல்லக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் பணமானது பொங்கிப் பெருகும், வளர்ந்து கொண்டே செல்லும் என்பது நம்பிக்கை. சம்பளம் வாங்கியதும் இந்த ரெண்டு விஷயத்தை ட்ரை பண்ணி பாருங்க, செலவு கணக்கு குறையும், வரவு கணக்கு அதிகரிக்கும்.

- Advertisement -