- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 14-03-2025 மகாலட்சுமி ஜெயந்தி.

நாளை 14-03-2025 மகாலட்சுமி ஜெயந்தி.

- Advertisement -

மகாலட்சுமி ஜெயந்தி. மகாலட்சுமியிடம் வேண்டிய வரங்களை பெற நாளைய தினம் வரக்கூடிய வெள்ளிக்கிழமையை யாரும் தவறவிடக்கூடாது. நாம் எல்லோருக்கும் புரியும்படி சொன்னால் நாளை மகாலட்சுமிக்கு பிறந்தநாள். நாளை மகாலட்சுமிக்கு பிறந்தநாள். அவர்கள் மன மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி என்ன வரம் கேட்டாலும் நமக்கு கிடைக்கும் தானே.

அதுவும் இல்லாமல் 14 ஆம் தேதி வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காரடையான் நோன்பு இருக்கிறது. தாலிக்கயிறு மாற்றுவதற்கு இந்த நாள் சிறப்பான நாள். இந்த நாளில் பெண்கள் தங்களுடைய கணவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த அற்புதமான நாளில் நாம் நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பூஜையானது முழு பலனையும் கொடுக்கும்.

- Advertisement -

சரி 14ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை எப்படி வழிபாடு செய்யலாம். கொஞ்சம் செலவு பார்க்காமல், ஒரு தாமரை பூ வாங்கி வைத்து விடுங்கள். மகாலட்சுமி பிறந்த நாளன்று மகாலட்சுமிக்கு பிடித்த தாமரை பூ வாங்கி பூஜையறையில் வைப்பது ரொம்பவும் நல்லது. மகாலட்சுமிக்கு பிடித்தமான பசும்பாலில் செய்த பால் பாயாசம் நெய்வேதியம் வைத்து விட வேண்டும். ஏலக்காய் போட்டு இந்த நெய்வேத்தியம் தயார் செய்து விடுங்கள். பூஜை அறையை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வாசம் நிறைந்த ஊதுவத்திகள் ஏற்றி வைத்து விடுங்கள்.

மகாலட்சுமிக்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு நட்சத்திர சோம்பு, அதாவது அன்னாச்சி பூ போட்டு அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம், ஒரு நெல்லிக்காயும் போட்டு மகாலட்சுமி பாதத்தில் வைத்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க விட வேண்டும். பிறகு மகாலட்சுமியிடம் மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை நிறைவடைந்த உடன் அந்த அன்னாசி பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் எடுத்து பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால், உங்கள் வீட்டில் பணம் அதிகமாக சேர துவங்கிவிடும். வறுமை, கஷ்டம், கடன் தொல்லை எல்லாம் நீங்கும். பீரோவில் கட்டு கட்டாக பணமும் தங்க நகைகளும் மட்டும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜை அறையில் நிவேதியமாக வைத்த நெல்லிக்காயை என்ன செய்வது அதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிடலாம். இரண்டு பேருக்கு அந்த பால் பாயாசத்தை தானமாக கொடுக்கலாம். இவ்வளவுதான் வழிபாடு. நாளைய தினம் கட்டாயம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் நெல்லிக்காய் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வஸ்திர தரித்தரம் பலன்கள்

கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் வீட்டில் ஒலிக்கப்பட வேண்டும். இதை செய்தால் போதும் செல்வம் மழையானது உங்கள் வீட்டில் பொழிய துவங்கிவிடும். மகாலட்சுமியின் பிறந்த நாளில், மகாலட்சுமியிடம் வரத்தை கேட்க யாரும் தவற விடாதிங்க. இந்த அருமையான தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்