
நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலைக்கும், தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவர்கள் பின்பற்றிய வந்த விஷயங்களை எல்லாம் அப்படியே நாமும் பின்பற்றுவது என்பது, இயலாத காரியம்.
இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த, ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை, நம் வீட்டில் பின்பற்றும் போது, நம் வீட்டில் இருக்க கூடிய கஷ்டங்கள் குறையும் என்பது சில ஜோதிடர்களின் கருத்து. இதன் அடிப்படையில் சமையலறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
வீட்டு பொருளாதாரம் மேன்மை அடைய இந்த எளிய பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். அந்த காலத்தில் குழாய் வசதி எல்லாம் கிடையாது. தண்ணீர் என்றால் குடத்தில் தேக்கி வைத்து தான் சமையலறையில் பயன்படுத்த வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்த வேண்டும். இன்று தேக்கி வைப்பதற்கான இடமும் நமக்கு கிடையாது, சின்ன சின்ன சமையலறையில் பாத்திரம் வைப்பதற்கு இடம் இல்லாத சூழ்நிலை ஒரு சில பேருக்கு இருக்கிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் நிறைய பாத்திரத்தில் தண்ணீரை சமையலறையில் நிரப்பி வைப்பது என்பது முடியாத காரியம். சரி என்ன செய்வது, ஒரு சில்வர் சொம்பு அல்லது பித்தளை செம்பு சொம்பு இப்படி ஏதாவது ஒரு சொம்பு வாங்கி கொள்ளுங்கள். அல்லது தவளை கொஞ்சம் பெரிய பாத்திரமாக வாங்கி கூட இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த பாத்திரத்தில் குடிக்கின்ற தண்ணீரை நிரப்பி விடுங்கள். உங்கள் வீட்டு சமையல் அறையில் தெற்கு சுவர் பக்கம், அல்லது வடக்கு சுவர் பக்கம் இந்த குடத்தை வைத்து விடவும். எக்காரணத்தைக் கொண்டும் இதற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்தக் கூடாது. அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் சமைப்பதற்கு குடிப்பதற்கு இந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்து புழங்கவும். இவ்வளவுதான் பரிகாரம். மறுநாள் காலை பழைய தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றி விட்டு, இந்த பாத்திரத்தை விளக்கி இதில் புது தண்ணீர் ஊற்றி வைத்து புழங்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையை மட்டும் நீங்கள் பின்பற்றி வந்தால் வீட்டில் பெண்களுக்கு மனநிலை குழப்பமடையாமல், சீராக இருக்கும்.
வீட்டு செல்வ நிலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்லும். கடன் சுமை இருக்காது. ஆரோக்கிய பிரச்சனை வீட்டில் வரவே வராது. தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள். அதே போல பாத்திரம் தேய்ப்பதற்கு சிங்கில் தான் பைப்பை திறந்துவிட்டு தண்ணீரை பயன்படுத்த நம்மால் முடியும். ஆனால் சலசலவென தண்ணீரை திறந்து அதிகமாக தண்ணீரை வீணடிக்காதீர்கள்.
இதையும் படிக்கலாமே: ஐப்பசி வெள்ளி மகாலட்சுமி பூஜை
கூடுமானவரை தண்ணீரை குறைவாக வைத்து தண்ணீரை சிக்கனப்படுத்த பாருங்கள். அதுவே உங்கள் வீட்டு பண பிரச்சனையை உடனடியாக தீர்க்கும். ஆர்.ஓ வாட்டர்லிருந்து வெளிவரும் அவுட் வாட்டரை கூட தயவுசெய்து பிடித்து, கழிவறைக்கோ பாத்ரூமுக்கு பயன்படுத்த பாருங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.