- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐப்பசி வெள்ளி மகாலட்சுமி பூஜை

ஐப்பசி வெள்ளி மகாலட்சுமி பூஜை

- Advertisement -

இந்த ஐப்பசி மாதத்தை ஜோதிட ரீதியாக துலாம் மாதம் என்று சொல்கிறார்கள். துலாம் மாதத்திற்கு உரியது தராசு. மளிகை கடை வைத்திருப்பவர்கள் இந்த தராசின் மூலம் தான் அளந்து மளிகை பொருட்களை விற்பனை செய்வார்கள். இந்த துலா மாதம் தராசு மாதம், அன்னபூரணிக்கு உரிய மாதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஐப்பசி வெள்ளியில் நாம் அன்னபூரணியை நினைத்து வீட்டில் செய்யக்கூடிய இந்த வழிபாடு, அளவில்லா ஐஸ்வர்யத்தை நமக்கு பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அளவில்லா செல்வ வளத்தை நமக்கு கொடுக்க போகும் அந்த எளிமையான வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு

முதலில் 5 சின்ன சின்ன கிண்ணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பூஜைக்காக பயன்படுத்தக்கூடிய எச்சில் படாத பாத்திரங்கள் இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அது பிளாஸ்டிக், சில்வர், பீங்கான், கண்ணாடி, எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அந்த பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு நன்றாக ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். அந்த சின்ன கிண்ணம் நிரம்ப ஐந்து பொருட்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்து, மொச்சை, கல் உப்பு, பச்சை பயிறு இப்படி எதாவது ஐந்து பொருட்களை சொல்லலாம். இது எல்லாம் எங்கள் வீட்டில் இல்லை என்றால் பாசிப்பருப்பு, சாதத்திற்கு பயன்படுத்தும் அரிசி உங்கள் வீட்டில் வேறு ஏதாவது பருப்பு வகைகள் இருந்தாலும் அதை எடுத்து கிண்ணத்தில் கொட்டி பூஜை அறையில் மகாலட்சுமி தேவியின் முன்பு அலங்கரித்து விடுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் அன்னபூரணி தாய் இருந்தால் அவள் முன்பு கூட இந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்கலாம் தவறு கிடையாது. இந்த ஐந்து கிண்ணத்திற்கு நடுவில் இன்னொரு கிண்ணத்தில் உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளையும் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். (ஐந்து பொருட்களுக்கு மேலே இன்னும் நிறைய பொருட்களை வைத்து வழிபட்டாலும் தவறு கிடையாது).

பிறகு விளக்கு ஏற்றி வைத்துவிடுங்கள். எங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வரக்கூடாது, தாயே அன்னபூரணி எங்கள் குடும்பத்திற்கான அருள் ஆசியை வழங்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டு, லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது மகாலட்சுமிக்கு பிடித்த பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுங்கள். மனம் உருகி பிரார்த்தனை செய்துவிட்டு பின்பு இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இன்று மாலை இந்த பூஜைக்கு உங்களால் முடிந்த பிரசாதம் ஏதாவது செய்து வைக்க முடியும் என்றாலும் வைக்கலாம். பூஜையை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து இந்த கிண்ணத்தில் வைத்திருக்கக் கூடிய மளிகை பொருட்களை எல்லாம் எடுத்து உங்கள் சமையலறையில் இருக்கும் அந்தந்த பொருட்களோடு கலந்து விட வேண்டும். உதாரணத்திற்கு அரிசியை எடுத்து அரிசி மூட்டையில் கொட்டி விடுங்கள், பருப்பை எடுத்து பரப்பு டப்பாவில் கொட்டி விடுங்கள், இதுபோல அந்தந்த இடத்தில் பொருட்கள் போய் சேரட்டும்.

பிறகு பணம் வைத்திருக்கிறீர்கள், அந்த பணத்தையும் எடுத்து எப்போதும் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இப்படி ஐப்பசி மாதம் அன்னலட்சுமியை நினைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்து பூஜை அறையில் இருந்து எடுத்த பொருட்கள் நாம் பயன்படுத்தும் பொருட்களோடு கலக்கும் போது, அந்த குறிப்பிட்ட பொருட்கள் எல்லாம் அபரிவிதமாக பெருகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்ய தீப வழிபாடு

இந்த பூஜையை நீங்களும் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பணமும் சரி, தானியமும் சரி பல மடங்காக பெருகிக்கொண்டே செல்லும். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த எளிய வழிபாட்டை இன்று செய்து பாருங்கள். அடுத்த வருட ஐப்பசி மாதம் உங்கள் பொருளாதார நிலைமை நிதி நிலைமை எல்லாம் உயர்ந்து, கடன் சுமையெல்லாம் குறைந்திருக்க கூடிய பாக்கியத்தை நீங்கள் பெறுவீர்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்