
வருகின்ற 2025 ஆம் புதிய ஆண்டில் மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. நவகிரகங்களில் சனி பகவான் நியாயமான கிரகமாக கருதப்படுகிறார். சனி கொடுப்பது போல யாரும் கொடுப்பது கிடையாது, சனி கெடுப்பது போல யாரும் கெடுப்பது கிடையாது. அவர் கொடுத்தால் அள்ளி அள்ளி கொடுப்பார். இவ்வருடம் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர இருக்கிறார். இந்த சனி பெயர்ச்சி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்? என்பதைத் தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் அறிய இருக்கிறோம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி நிம்மதியை கொடுக்கும். இதுவரை இருந்து வந்த பல பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. குறிப்பாக பல்வேறு உடல் உபாதைகளில் அவதி பட்டவர்கள், அதிலிருந்து நிவாரணம் காணக் கூடிய யோகத்தை பெறுவீர்கள். உங்கள் செயலுக்கு ஏற்ப பலன்களை கொடுக்க விரும்புகிறார் சனி பகவான்! எனவே உஷாராக இருந்து கொள்ளுங்கள். செய்யும் செயலில் நேர்மை இருந்தால் வெற்றி உங்களுக்கு சாதகமாக இருக்கும். சரிந்து மந்தமாக இருந்து வந்த தொழில் அல்லது வேலையில் இருந்து மீண்டு வந்து நினைத்ததை சாதிப்பீர்கள். புதன் பெயர்ச்சியின் பொழுது நிதி சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து பண வரத்து அதிகரிக்கும். ஆக அதிர்ஷ்ட காற்று வீசுவதும், ஓய்வெடுப்பதும் உங்கள் செயலில் தான் என்பதை மறவாதீர்கள்.
துலாம்:
இந்த சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உங்களுக்கு பேரின்பத்தை கொடுக்கும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இதுவரை நீங்கள் இருந்திருப்பீர்கள். திசை தெரியாமல் அலைந்த உங்களுடைய மனதிற்கு திசை காட்டக் கூடிய யோகம் வந்துவிட்டது. இடமாற்றம் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்பவர்களின் கனவுகள் நினைவாகும். வீடு, வாகன பேறு ஏற்படும். சொந்த முயற்சிகளில் செய்யக் கூடிய கடினமான காரியங்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். உங்களை எதிரியாக நினைப்பவர்களை தாண்டி முன்னேறி செல்வீர்கள். “யாமிருக்க பயமேன்” என்று சொல்லி முருகனை வழிபட்டு வாருங்கள், வந்த வினை எல்லாம் வெந்து மண்ணோடு மண்ணாகும். ஆண்டின் முதல் பாதியில் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
மகரம்:
மகர ராசிக்கு பிடித்துக் கொண்டிருந்த ஏழரை சனி மார்ச் மாதத்துடன் முழுமையாக நிறைவு பெறுகின்றது. இதனால் மகர ராசிக்கு இனி வரப்போகும் காலமெல்லாம் வசந்த காலமாக அமையும். உங்கள் கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், இனி வரப் போகும் எல்லா காலமும் திறமையால் முன்னேறுவீர்கள்.
திருமணம், குடும்பம், பணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை நீங்கள் கண்டு வந்திருந்த குழப்பங்கள் தோல்விகள் தீர்ந்து, சுப பலன்கள் உண்டாகும். கடுமையான மன இறுக்கத்திற்கு ஆளான நீங்கள் தெளிவான எண்ணங்களால் திருப்தி கொள்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், சொத்துக்களும் உங்கள் கைக்கு வரும் யோகம் உண்டு. குருட்டு நம்பிக்கை கூட இனி கை கொடுக்கும் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் உண்டு.
இதையும் படிக்கலாமே:
அமாவாசை தாயத்து பரிகாரம்
மேலும் மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களும் ஓரளவுக்கு சனி பெயர்ச்சியால் நற்பலன்களை பெறுவீர்கள். மற்ற ராசிக்காரர்களுக்கு கடவுளின் அருளால் சனி பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சனி பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள், சிம்மம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் 29 ஆம் திகதி 2025 சனிப்பெயர்ச்சி அன்று தவறாது சனி பகவான் வழிபாட்டை 12 ராசிக்காரர்களும் மேற்கொண்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.