வாழ்வில் பணக்கஷ்டமே வரக்கூடாது, எந்த நேரமும் வருமானம் வந்த வண்ணம் இருக்க வேண்டும். நம்மை பிடித்த பீடை எல்லாம் நம்மை விட்டு விலக வேண்டும். தரித்திரம் எல்லாம் விலக வேண்டும் என்றால் என்ன செய்வது. முழுமையாக இறைவனின் மீது நம்பிக்கை வைத்து அயராது உழைக்க வேண்டும். உழைப்போடு சேர்த்து நாம் செய்யும் பரிகாரம் நமக்கு பணவரவை இரட்டிப்பாக கொடுக்கும்.
எப்போதும் பண வரவை கொடுக்கக்கூடிய, பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இது தாந்த்ரீக பரிகாரமாக இருந்தாலும், அமாவாசை அன்று குலதெய்வத்தை நினைத்து செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரம். இந்த பரிகாரத்தை எப்போது செய்வது. எப்படி செய்வது. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
அமாவாசை தாயத்து பரிகாரம்
அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நாளை 30.11.2024 சனிக்கிழமை காலை 11:00 மணி அளவில் அம்மாவாசை திதி பிறக்கிறது. மறுநாள் காலை 1.12.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணி வரை அமாவாசை திதி இருக்கிறது. சனிக்கிழமை தான் அமாவாசை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி தர்ப்பணங்களை சரியாக செய்து விடுங்கள். முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எப்போதும் போல மதியம் 12:00 மணிக்கு நீங்கள் அமாவாசை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதோடு சேர்த்து இந்த பணம் தரும் தாந்திரீக பரிகாரத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான வேர் குப்பைமேனி வேர். நம்மிடம் இருக்கும் குப்பைகளை அகற்றக் கூடிய வேர் குப்பைமேனி வேர். அப்படி வைத்துக் கொள்ளுங்கள். குப்பை என்றால் நம் உடம்பில் தேவையில்லாமல் தேங்கி நிற்கும் எதிர்மறை ஆற்றலின் மூலமாகத்தான் பணத்தடை ஏற்படுகிறது.
அதையெல்லாம் வெளியேற்ற வேண்டும் என்றால் இந்த குப்பைமேனி வேர் நமக்கு தேவைப்படும். என்ன செய்யலாம். குப்பைமேனி வேரை பிடுங்குவதற்கு முன்பாக அந்த செடியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். இந்த வேர் சரியான பரிகாரத்திற்கு தான் பயன்படுத்தபடுகிறது. எந்த தவறான விஷயத்திற்கும் இந்த வேர் பயன்படுத்தப்படாது என்று சொல்லி, மஞ்சள் தண்ணீரை தெளித்து வணங்கி அந்த வேரை பிடுங்கி எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வேரை இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களால் வெட்டக்கூடாது. உங்களுடைய விரல்களால் அந்த வேரை கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வேர் இருந்தால் போதும். அந்த வேரை மண் போக சுத்தம் செய்துவிட்டு எடுத்து ஒரு தாம்பூல தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். சாம்பிராணி தூபம் மணக்க மணக்க போடுங்கள். ஒரு தாயத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளி தாயத்தாக இருந்தால் சிறப்பு. இல்லை என்றால் இரும்பு சேர்க்கப்படாத தாயத்து தேவை. எவர்சில்வர் தாயத்து, பித்தளை தாயத்து வாங்கிக் கொள்ளுங்கள். தயார் செய்து வைத்திருக்கும் இந்த வேரை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து ‘ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
பிறகு தாயத்துக்கு உள்ளே கொஞ்சம் தூள் செய்யப்பட்ட பச்சை கற்பூரம் போட்டு இந்த வேரை அதற்குள் போட்டு தாயத்தை மூடி உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். செயின் போட்டு இருந்தால் அதோடு இந்த தாயத்தை கோர்த்து போட்டுக் கொள்ளுங்கள். தாலி சரடில் கூட ஒரு சிவப்பு கயிறு போட்டு இந்த தாயத்தை கட்டலாம். ஆனால் இடுப்பில் இந்த தாயத்தை கட்டக்கூடாது. கழுத்து, கைகளில், கை புஜங்களில் இந்த தாயத்தை கட்டிக் கொள்ளலாம்.
இந்த தாயத்தை குலதெய்வத்தை வேண்டி உங்கள் கையில் கட்டிக் கொள்ளுங்கள். தாயத்து கட்டிய 48 நாட்களில் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து இருக்கும். கடன் சுமையும் படிப்படியாக குறைந்திருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைத்திருக்கும்.
இதையும் படிக்கலாமே: புண்ணியம் சம்பாதிக்கும் வழிகள்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வரும் அல்லவா, அப்போது அந்த தாயத்துக்கு உள்ளே இருக்கும் பழைய வேரை எடுத்துவிட்டு புது வேர் போட்டால், எப்போதும் நீங்கள் பணக்கஷ்டம் இல்லாமல் வாழலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் பெரிய அளவில் பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.