
எந்த தெருவில் திரும்பினாலும் அந்த இடத்தில் விநாயகரை நாம் பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு நீக்கமற அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க கூடிய விநாயகர் பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுவது தான் சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாள் என்பது அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வருடத்தில் சில குறிப்பிட்ட சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிப்பட்டோம் என்றால் அந்த வருடம் முழுவதும் விநாயகப் பெருமானை வழிபட்டதற்குரிய பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மாதங்களாக கருதக்கூடிய மாதங்கள் தான் மார்கழி, தை, மாசி, ஆவணி இதோடு சேர்த்து இந்த ஐப்பசியும். ஐப்பசியில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக் கூடியவர்கள் நாம்தான். சரியான நேரத்தில் சரியான வழியை நாம் தேர்ந்தெடுக்காதது தான் நம்முடைய பிரச்சனைகள் அனைத்திற்குமே காரணமாக திகழ்கிறது. இந்த புத்தியை மேலும் செம்மையாக்க உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான். விநாயகப் பெருமானை அனுதினமும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு தெளிவான புத்தி என்பது ஏற்படும். அதன் மூலம் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்ற தெளிவான எண்ணமும் உண்டாகும். இதனால் நமக்கு எந்தவித பிரச்சினைகளும் வராமல் இருக்கும்.
அதையும் மீறி நமக்கு பிரச்சனைகள் வந்துவிட்டது என்றால் அந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்கு தான் சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். வீட்டில் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது 21 வகை இலைகளை இயன்றவர்கள் எடுத்துக்கொண்டு செல்லலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அருகம்புல், எருக்கு இலை இவை இரண்டையாவது எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இவை இரண்டையும் விநாயகப் பெருமானுக்கு கொடுத்துவிட்டு விநாயகப் பெருமானை 21 முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும்போது விநாயகப் பெருமானின் மந்திரங்களை கூறிக்கொண்டே வலம் வரலாம். அப்படி மந்திரங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் “விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானே போற்றி” என்று கூறிக் கொண்டே வலம் வர வேண்டும்.
இவ்வாறு நாம் விநாயகரின் ஆலயத்திற்கு செல்லும் பொழுது நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை பிரசாதமாக எடுத்துக்கொண்டு விநாயகருக்கு வைத்து வழிபாடு செய்து விட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு தரலாம். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரசாதமாக திகழ்வது சுண்டல் மற்றும் கொழுக்கட்டை. இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
வீட்டில் எளிமையான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது விளக்கெண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அருகம்புல்லை கண்டிப்பான முறையில் விநாயகருக்கு வைக்க வேண்டும். வீட்டில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருமானுக்கு என்று ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அவ்வையார் அருளிய விநாயகர் அகவலை நிறுத்தி நிதானத்துடன் விநாயகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமான் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மகாலக்ஷ்மி வீட்டிற்கு வர வாசலில் போட வேண்டியது
இந்த எளிமையான வழிமுறையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும், வேண்டிய வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.