- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போல் நாம் ஃபேஸ் பேக், ஃபேஸ் கிரீம் பயன்படுத்தினால் தான் அதனால் நம்முடைய சருமத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் நாம் எதிர்பார்த்த பலனையும் நம்மால் பெற முடியும். எண்ணெய் பசை மிகுந்த சருமம் இருப்பவர்கள் வறண்ட சருமத்திற்குரிய ஃபேஸ் பேக் அல்லது க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது. அதேபோல் வறண்ட சருமம் இருப்பவர்கள் எண்ணெய் பசை மிகுந்த சருமம் உடையவர்களுடைய ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் க்ரீமை பயன்படுத்தினால் அவர்களுக்கும் இந்த பலனும் கிடைக்காது.

நம்முடைய சருமம் எப்படிப்பட்ட சருமம் என்பதை உணர்ந்து அந்த சருமத்திற்குரிய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது தான் நம்முடைய சிரமம் அழகாக தோற்றமளிக்கும். ஆனால் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் ஒரே ஒரு பொருளை வைத்து அனைத்து சருமத்தினரும் எப்படி பயன்படுத்தினால் அவர்களுடைய முகத்தை அழகாக பராமரிக்க முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

சமையலறையில் இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளுடன் இன்னும் சில பொருட்களை சேர்க்கும் பொழுது எண்ணெய் பசை மிகுந்த சருமமாக இருந்தாலும் சரி வறண்ட சருமமாக இருந்தாலும் சரி சாதாரண சிரமமாக இருந்தாலும் சரி அந்த சருமம் மேலும் மென்மையடைந்து பொலிவுடன் அழகுடனும் தென்படும் என்று கூறப்படுகிறது. அந்த பொருள்தான் ஆதிகாலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கடலை மாவு.

கடலை மாவை பயன்படுத்தி ஃபேஸ் க்ரீம்களும் தயாரிக்கப்படுகின்றன. நாமே நம்முடைய வீட்டில் கடலைமாவை பயன்படுத்தி பலவிதங்களில் ஃபேஸ் பேக்களை செய்து உபயோகப்படுத்தி இருப்போம். ஆனால் இந்த கடலைமாவுடன் எந்தெந்த பொருட்களை நாம் சேர்த்து செய்தோம் என்றால் நமக்கு ஏற்றார் போல் நம்முடைய சருமம் அழகாக இருக்கும் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வறண்ட சருமம் இருப்பவர்கள் கடலை மாவுடன், தேன், மஞ்சள் தூள், காய்ச்சாத பசும்பால் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் பொழுது அவர்களுடைய வறண்ட சருமம் என்பது நீங்கி மென்மையான சருமத்தை ஏற்படுத்தும்.

எண்ணெய் பசை மிகுந்த சருமமாக இருப்பவர்கள் இந்த கடலை மாவுடன் தயிர், எலுமிச்சை பழ சாறு இவற்றை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் மென்மையாகும்.

- Advertisement -

சாதாரண சருமம் இருப்பவர்கள் கடலை மாவுடன் வெறும் கஸ்தூரி மஞ்சள் தூளை மட்டும் சேர்த்து பன்னீர் ஊற்றி குழைத்து முகத்தில் தடவ முகம் மென்மையாகும். குளிக்கும் பொழுது சோப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக கடலைமாவை பயன்படுத்தி குளித்தோம் என்றால் சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை வெண்மையாக்கும் ஃபேஸ் க்ரீம்

நம் முன்னோர்களின் அழகை பாதுகாத்த இந்த கடலை மாவை வைத்து ஒவ்வொருவருடைய சருமத்திற்கு ஏற்றார் போல் ஃபேஸ் பேக் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய சருமத்தை மேலும் அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -