- Advertisement -
ஜோதிடம்

செவ்வாய் குரு பலன்கள்

- Advertisement -

ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் போக உள்ளார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் தான் இருக்கிறார். ஆதலால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கட்டாயம் இருக்கும். அதிலும் ஒரு சில ராசிகளுக்கு தாக்கம் நன்றாகவே இருக்கும். அந்த ராசிகளை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

நாம் நவகிரகங்கள் வணங்குவது தொடர்கதை ஆகும். அதில் மங்கள யோகா கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்பவர். இவர் தேவர்களின் ராஜ குரு ஆவர். வருடத்திற்கு ஒரு முறை இடம் மாறி விடுவார். இவர் மே மாதம் 3ம் தேதி அன்று ரிஷப ராசியில் புகுந்தார்.

- Advertisement -

அதேபோல் இந்த ஜூன் மாதம் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் மாற போகிறார். ஆதலால் குரு செவ்வாய் சேர்க்கை ஏற்பட போகிறது. எனவே இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது என்ன என்ன அதிர்ஷ்ட ராசிகள் என்று பார்போம் வாருங்கள்.

ரிஷப ராசி

முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்குள் மிக உயர்வான தன்னம்பிக்கை ஏற்பட கூடும். உங்களுக்கு வர வேண்டிய பணம் உங்களை நிச்சயம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் நல்ல மரியாதையும் கிடைக்கும். வேலையில் சம்பளத்தில் உயர்வு கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும்.

- Advertisement -

கடக ராசி

11-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். ஜூன் மாதத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். மன உறுதியும் தன்னம்பிக்கை ஏற்படும். வழக்கத்தை காட்டிலும் நடவடிக்கையில் சுறுசுறுப்பு காணப்படும். வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி

பத்தாவது இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்கிறார். எனவே உங்கள் வாழ்வில் வேலை மற்றும் வியாபாரம் உயர்வதற்கான வாய்ப்பு நன்றாகவே உள்ளது. வேலைக்கு செல்லும் இடத்தில் சம்பள உயர்வு, மரியாதை மற்றும் பெருமைக்குரிய நிறைய விஷயங்கள் ஏற்பட வாய்ப்பு கைக்கூடும். கணவன் மனைவிக்கடைய அன்பு அதிகரிக்கும். நல்ல யோகம் பிறக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே:எதிரிகள் தொல்லை நீங்க எளிமையான பரிகாரம்
மேல் சொன்ன அனைத்தும் பொது பலன்களே. இந்த பலன்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்புகளும் இருக்கிறது. குறைவாக கிடைக்க வாய்ப்புகளும் இருக்கிறது. சுயஜாதகத்தை பரிசீலித்து பலன் பெறுவது நன்மையை தரும். முயற்சிக்கு ஏற்ற பலனை பிடிக்கும் என்பதால் முயற்சிகளை செய்து அதன் மூலம் பலன்களை பெறுங்கள்.

- Advertisement -