- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகள் தொல்லை நீங்க எளிமையான பரிகாரம்

எதிரிகள் தொல்லை நீங்க எளிமையான பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்களும் தீர்வுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த முறையில் நமக்கு தெரிந்த அல்லது தெரியாத எதிரிகளால் நமக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக நம்முடைய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடைகளாகவே எதிரிகள் திகழ்வார்கள். அப்படிப்பட்ட எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கவும் அந்த எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்லவும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகள் தொல்லை நீங்க

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி ஒரு உயரிய நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்தால் அதை தடை செய்து அவர்களை கீழே இறக்கி விடுவதற்கு என்று தான் நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களை தான் எதிரிகள் என்று நாம் கூறுவோம். இவர்கள் தொழில் ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ, படிப்பு ரீதியாகவோ, பண ரீதியாகவோ நமக்கு எதிரிகளாக மாறலாம்.

- Advertisement -

நம்முடைய முன்னேற்றத்தில் பல தடைகளை கொண்டு வந்து சேர்த்து நம்மை முன்னேறு விடாமல் தடுக்க கூடியவர்களாகவும் இவர்கள் திகழ்வார்கள். ஒரு சிலருக்கு தங்களின் எதிரிகள் இவர்கள். இவர்கள் தான் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்கிறார்கள் என்று நன்றாக தெரியும். இன்னும் சிலருக்கோ அருகிலேயே இருந்து கொண்டு நண்பன் போல பழகி ஆனால் மறைமுகமாக எதிரிக்குரிய வேலைகள் அனைத்தையும் செய்வார்கள்.

அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம். எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்கள் நம்மை விட்டு விலகிச் செல்லவும் அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கவும் செய்யக்கூடிய பரிகாரங்களை பார்ப்போம்.

- Advertisement -

ஜாதக ரீதியாக ஒருவருடைய லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய கிரகம் எந்த கிரகம் என்பதை பார்த்து அந்த கிரகத்திற்குரிய கிழமையில் அந்த கிரகத்திற்குரிய தானியத்தை இடது கையில் வைத்துக்கொண்டு தலையை மூன்று முறை சுற்றி ஓடுகின்ற நீரில் போடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

உதாரணமாக சூரிய பகவான் என்றால் அவருக்குரிய கிழமை ஞாயிற்றுக்கிழமை. அவருக்குரிய தானியம் கோதுமை. கோதுமையை எடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று தலையை சுற்றி ஓடுகின்ற நீரில் போட வேண்டும். இது ஜாதக ரீதியாக கூறப்பட்டுள்ள பரிகாரம்.

- Advertisement -

இதை தவிர்த்து செவ்வாய்க்கிழமை அன்று 8 குறுமிளகை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மிளகை வைத்து உங்களுடைய தலையை மூன்று முறை இடது புறமாக சுற்றி அடுப்பில் போட்டு எரித்து விட வேண்டும். அடுப்பு இல்லை என்பவர்கள் தேங்காய் ஓட்டில் போட்டு எரித்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்ய செய்ய எதிரிகளின் பிரச்சினைகள் தீரும்.

மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். எதிரிகளால் பலவிதங்களில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எதையும் சமாளிக்க முடியவில்லை என்று புலம்புபவர்கள், ஒரு நல்ல புள்ளி இல்லாத எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் மேல் பாதி அளவு மட்டும் நான்காக நறுக்கி அதற்கு நடுவில் ஒரு கற்பூரத்தை வைத்து யாருக்கு எதிரிகளால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறதோ அவர்களின் தலையில் வைத்து அந்த கற்பூரத்தை ஏற்ற வேண்டும். ஒரு நிமிடம் அந்த கற்பூரம் தலையிலேயே எரிய வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே எடுத்து வந்து தங்களுடைய தலையிலிருந்து கால் வரையும் காலிலிருந்து தலைவரை என்று மூன்று முறை சுற்றிவிட்டு அந்த கற்பூரத்தை வாசலிலேயே போட்டுவிட்டு எலுமிச்சம் பழத்தை முச்சந்தி இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: அரச இலை குளியல் பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரங்களில் எந்த பரிகாரம் உங்களால் செய்ய முடியுமோ அந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து எதிரிகள் இடம் இருந்து விலகி எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பித்து நல்ல முறையில் வாழ்க்கையை முன்னேற்றலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்