- Advertisement -

செல்வ நிலை உயர மாசி வளர்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

எதிர்மறை ஆற்றலை விலக்கக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் கால பைரவர். இவர் காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாகவும் திகழக்கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது எந்த பக்கத்தில் இருந்தும் எந்த எதிரிகளாலும் எந்த தொந்தரவு வந்தாலும் அவை அனைத்தையும் நீக்குவார் என்றும் அதேசமயம் எட்டுத்திக்கிலிருந்தும் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பைரவருக்குரிய வளர்பிறை அஷ்டமி தினத்தன்று ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாசி வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பொதுவாகவே ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது பைரவரின் அருளோடு மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி சமயத்தில் அஷ்ட லட்சுமிகள் அனைவரும் காலபைரவரை வழிபாடு செய்வார்களாம். அந்த நேரத்தில் நாமும் வழிபாடு செய்யும்பொழுது இவர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட வளர்பிறை அஷ்டமி என்பது மாசி மாதத்தின் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்குரிய கிழமை, அந்த கிழமையோடு வளர்பிறை அஷ்டமியும் சேர்ந்து வரும்பொழுது நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நமக்கு பல மடங்கு நன்மைகளை தரும் என்றே கூறலாம்.

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2:03 மணிக்குள் செய்துவிட வேண்டும். காலையிலேயே அருகில் இருக்கக்கூடிய பைரவரின் ஆலயத்திற்கு சென்று 27 மிளகுகளை மூட்டையாக கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி கால பைரவரை வழிபாடு செய்யலாம். அந்த சமயத்தில் தயிர் சாதத்தை கால பைரவருக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் பொழுது நமக்கு சுக்கிர லட்சுமி யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே ஒரு தாம்பாலத்தை எடுத்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த தீபத்தில் 27 மிளகுகளை ஒரு ஒரு மிளகாக போட வேண்டும். ஒவ்வொரு முறையும் மிளகை போடும் பொழுது “ஓம் கால பைரவரே போற்றி ஓம்” என்று கூறிக் கொண்டே ஒவ்வொரு மிளகாக அந்த தீபத்தில் போட வேண்டும்.

இந்த தீபத்திற்கு முன்பாக பானகம் அல்லது மோர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து காலபைரவரை மனதார நினைத்து செல்வ வளம் அதிகரிக்க வேண்டும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:

வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அஷ்டலட்சுமிகளின் அருளையும் சுக்கிர பகவானின் அருளையும் கால பைரவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான வழிபாட்டை முழுமனதோடு பின்பற்றினால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -