- Advertisement -

செல்வம் சேர ஆனி முதல் வெள்ளி வழிபாடு

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும்.எ மேலும் அன்றைய தினம் சுக்கிர வாரம் என்பதால் சுக்கிரபகவானை வழிபாடு செய்வதற்கும் உகந்த கிழமையாகவே கருதப்படுகிறது. இவர்கள் இருவரையும் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் செல்வநிலை உயர்வதற்கும் ஆனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆனி முதல் வெள்ளி வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் தனி சிறப்புகள் என்பது இருக்கிறது. அதனால்தான் பலரும் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக மகாலட்சுமிக்கு பிடித்த முறையில் நாம் பூஜை செய்யும் பொழுது மகாலட்சுமியே நம் வீடு தேடி வருவாள் என்று கூட கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமிக்கு பிடித்தமான பூஜையை செய்வதற்கு மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்காக சில பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று வாங்கி மகாலட்சுமி தாயாருக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமான குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக கருதப்படுவது தான் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு. பலரும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக் கூடிய கடைக்கு சென்று கல்லுப்பை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைப்பார்கள். இப்படி சுக்கிர ஹோரையில் வீட்டு பூஜை அறையில் கல் உப்பை வைப்பதன் மூலம் மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் வருவதாக கருதப்படுகிறது. இந்த கல் உப்பை அப்படியே வைக்காமல் ஒரு கிண்ணத்தில் கொட்டி அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

அடுத்ததாக மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் மாதுளம் பழம். ஒரே ஒரு மாதுளம் பழத்தை வாங்கி அதன் முத்துக்களை மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தேன் கலந்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்யலாம். இந்த மாதுளம் பழ முத்துக்களை வாராகி அம்மனுக்கு வைத்து வழிபாடு செய்யலாம். இதன் மூலம் மகாலட்சுமி மற்றும் வாராஹி அருளை பெற முடியும்.

- Advertisement -

அடுத்ததாக சுக்கிரனின் தானியமாக கருதப்படக் கூடிய வெள்ளை மொச்சை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இயன்றவர்கள் அதை சுண்டலாக வேகவைத்தும் வைக்கலாம் அல்லது பச்சையாகவும் வைக்கலாம். இப்படி வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரை நேரத்தில் இந்த மூன்று பொருட்களையும் அல்லது இவை மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க பெற்று செல்வ நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கரிநாள் பரிகாரம்

மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ நிலையில் உயர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் ஆனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த பொருட்களை முழுமனதோடு வைத்து வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -