சுப நிகழ்ச்சிகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்று புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு நாளாக தான் கரிநாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட கரிநாளில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்று சில காரியங்கள் இருக்கின்றன. அந்த காரியங்களில் மிகவும் முக்கியமான ஒரு காரியமாக திகழ்வதுதான் கடன். கடன் பிரச்சனை தீர்வதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரம். அதிலும் இந்த முறை கரிநாள் என்பது தேய்பிறையில் வருகிறது. தேய்பிறையில் வரக்கூடிய கரிநாளில் கடன் தீருவதற்குரிய பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது தேய்பிறை போலவே கடனும் தேய்ந்து கொண்டே செல்லும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் தீர்க்கும் பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், கஷ்டத்தையும் தரக்கூடிய ஒன்று என்றால் அது கடன்தான். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இலங்கை வேந்தனின் கவலைக்கும் கடன் பட்டவரின் கவலையையும் ஒப்பிட்டு ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு கடன் என்பது மிகப்பெரிய கஷ்டமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்து விடுபடவும், நீண்ட நாட்களாக வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கிறோம், அசலை திருப்பி செலுத்த முடியவில்லை என்பவர்களும் தேய்பிறையில் வரக்கூடிய இந்த கரி நாளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெள்ளிக்கிழமையோடு கரிநாளும் அதேசமயம் தேய்பிறையும் சேர்ந்து வருகிறது. இதை தேய்பிறை சுக்கிர கரிநாள் என்று கூட கூறலாம். இந்த நாளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது 10:30 மணியில் இருந்து 12 மணிக்குள்ளோ இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும். நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்து அது நிரம்ப கல்லுப்பை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் எவ்வளவு கடன் பிரச்சனை இருக்கிறது என்பதை எழுதி அந்த தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அருகில் ஒரு சிறிய கிண்ணத்தில் தேனை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது முதலில் கணபதியை நாம் வழிபாடு செய்ய வேண்டும். “ஓம் கம் கணபதயே நமஹ” என்னும் மந்திரத்தை 51 முறை கூற வேண்டும். அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தை வழிபட வேண்டும். “ஓம் குலதெய்வத்தின் பெயர் நமஹ” என்று 51 முறை கூற வேண்டும்.
அடுத்ததாக “ஓம் லலித்தம் லம்போதரம்” என்னும் மகாலட்சுமியின் மந்திரத்தை 51 முறை கூற வேண்டும். இப்படி மகாலட்சுமியின் மந்திரத்தை நாம் கூறும்பொழுது யார் யாருக்கெல்லாம் கடன் தர வேண்டி இருக்கிறதோ அவர்களுக்கு கடன் தொகையில் இருந்து சிறிய தொகையாவது மாற்றி விட வேண்டும் அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கவரில் பணத்தை எடுத்து வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து சிவப்பு நிற பேனா மையை பயன்படுத்தி “ஓம் லலிதாம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை 51 முறை எழுத வேண்டும்.
இவ்வாறு எழுதி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்துவிட்டு அந்த பிரியாணி இலையை எரிந்து கொண்டிருக்கிற நெய் விளக்கில் காட்டி எரித்து அதன் சாம்பலை வெளியில் ஊதிவிட வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக வைத்த தேனை எடுத்து சாப்பிட வேண்டும். இந்த தீபம் குளிர்ந்த பிறகு கல் உப்பை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய உப்புடன் சேர்த்து வைத்து விட வேண்டும். இந்த முறையில் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறைக் கரிநாளன்று பரிகாரம் செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளியில் வரலாம்.
இதையும் படிக்கலாமே: வெளிநாடு வேலைக்கு வாஸ்து
கடன் பிரச்சினை தீர்வதற்கு எப்படி மைத்ரேய முகூர்த்தம் உதவுகிறதோ அதே போல் தேய்பிறையில் வரக்கூடிய கரிநாளும் நமக்கு உதவும். இந்த முறையில் வழிபாடு செய்து விட்டு கடனை திருப்பித் தருபவர்களுக்கு கடன் என்ற ஒன்று வாழ்க்கையில் இருந்து விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.