- Advertisement -
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீண்ட நாட்களாக வைத்திருந்த பணத்தையோ செல்வத்தையோ பொருளையோ பிறரிடம் கொடுத்திருப்போம். அதை திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை வரும் பொழுது திரும்ப பெற முடியாமல் தடைகள் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக நகைகளை அவசரத்திற்காக அடமானம் வைத்திருப்போம், ஆனால் அதை திரும்பினாலும் திரும்பவும் அடமானத்திற்கே சென்று விடும். இதே போல் ஒரு சில சொத்து பத்திரம், இன்னும் சிலரோ பிறரிடம் நம்பி பணத்தை கொடுப்பது, இப்படி பலவிதமான காரியங்களில் தங்களுடைய பொருட்களை இழந்து வாடக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு அற்புதமான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இழந்த செல்வத்தை பெற உதவும் தீபம்

தீபம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. யார் ஒருவருடைய வீட்டில் தீபம் எரிகிறதோ அவர்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டை விட்டு விலகிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் தினம் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தீபத்திலேயே சில சூட்சமமான தீபங்களும் இருக்கின்றன. அந்த தீபங்களை நாம் ஏற்றும் பொழுது அந்த தீபத்திற்குரிய பலனால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

அந்த வகையில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வம் நம்மிடம் இருந்து சென்று விட்டது திரும்பவும் நம்மை வந்து சேர வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம். இந்த தீபத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். கண்டிப்பான முறையில் அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும் பட்சத்தில் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். ஆண்கள் கூட இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதற்கு சிறிய பூசணிக்காயாக ஒரு பூசணிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதை இரண்டாக நறுக்கி அதற்கு நடுவில் இருக்கக்கூடிய விதை பகுதிகளை மட்டும் நீக்கிவிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து இரண்டிலும் சுத்தமான நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். பிறகு பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை பார்த்தவாரோ அல்லது வடக்கு திசை பார்த்தவாரோ இருக்க வேண்டும். பிறகு இந்த தீபத்தில் மூன்று பொடிகளை நாம் சேர்க்க வேண்டும். இந்த பொடிகளை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாகவே நம் தயார் செய்து வைத்து சம அளவு கலந்தும் வைத்துக் கொள்ளலாம். அந்த பொடிகள் தான் வலம்புரிக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, அருகம்புல் பொடி. வலம்புரிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து நன்றாக காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். ஜாதிக்காய் பொடியும் அருகம்புல் பொடியும் பொடியாகவே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

- Advertisement -

இவை அனைத்தையும் சரிசமமான அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து எரிகின்ற அந்த பூசணிக்காய் தீபத்தில் போட வேண்டும். இந்த தீபம் முழுமையாக எரிய வேண்டும். அவ்வாறு எரியும் பொழுது நீங்கள் முழுமனதோடு கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த செல்வம் திரும்ப உங்களிடம் வரவேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபம் முழுமையாக எரிந்து முடித்த பிறகு அந்த பூசணிக்காயை கால்படாத இடத்தில் எடுத்து போட்டு விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்பவர்களுக்கு இழந்த செல்வத்தை திரும்ப பெறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: தொழில் சிறக்க சனிக்கிழமை வழிபாடு

மூலிகை பொடிகளை சேர்த்து நாம் ஏற்றக்கூடிய இந்த தீபத்தால் நம் வீட்டிலும் நம் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகள் நீங்குவதோடு நாம் இழந்த அனைத்தையும் திரும்ப பெற முடியும். முழு நம்பிக்கையோடு தீபத்தை ஏற்றி முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -