- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழில் சிறக்க சனிக்கிழமை வழிபாடு

தொழில் சிறக்க சனிக்கிழமை வழிபாடு

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவு வருமானத்தை ஈட்ட வேண்டும். வருமானத்தை ஈட்டுவதற்கு பலரும் தேர்ந்தெடுக்கக்கூடிய முக்கியமான ஒரு வழியாக திகழ்வதுதான் தொழில் செய்வது. தொழில் செய்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. முதலில் நாம் எந்த தொழிலை செய்ய வேண்டும்? அந்த தொழில் நமக்கு சரி வருமா? அந்த தொழில் நமக்கு முன் அனுபவம் இருக்கிறதா? அந்த தொழிலில் எந்த அளவிற்கு லாபம் வரும் என்பதைப் போலவே எந்த அளவிற்கு நஷ்டம் வரும்? நஷ்டம் வந்தால் அதை எப்படி எல்லாம் சமாளிக்கலாம் என்று பலவிதமான ஆலோசனைகளை பெற்று தொடங்குவது தான் தொழிலாக கருதப்படுகிறது.

இப்படி பலவிதமான ஆலோசனைகளை பெற்று தொழிலை நாம் தொடங்கினாலும் அந்த தொழில் சரிவர நடைபெறாமல் நஷ்டத்தை அடைந்து பலரும் தொழிலை விட்டு வெளியே வரும் அவல நிலையும் ஏற்படத்தான் செய்கிறது, அப்படிப்பட்டவர்களும் சரி தொழிலை புதிதாக தொடங்குபவர்களும் சரி தங்கள் தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் அந்த தொழிலில் அதிகளவு வாடிக்கையாளர்களை அவர்கள் பெற வேண்டும். அப்படி அதிக அளவில் வாடிக்கையாளர்களை பெறுவதற்கும் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தொழில் சிறக்க சனிக்கிழமை வழிபாடு

ஒருவர் செய்யக்கூடிய தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் அவருக்கு சனீஸ்வர பகவானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். சனீஸ்வர பகவானின் அருளை பெற வேண்டும் என்றால் சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கும் வழக்கத்தை கொண்டு வர வேண்டும். தங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் அந்த தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு சனிக்கிழமை அன்று விரதம் இருந்து அந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வாராகி அம்மன் ஆலயத்திற்கு சென்று வாராகி அம்மனை 27 முறை வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு தொழிலில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்யும்பொழுது வாராகி அம்மனுக்கு தாமரைப்பூ மாலையை சாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தங்களுடைய இஷ்ட தெய்வம் பெருமாளாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலையையும் மகாலட்சுமிக்கு தாமரைப்பூ மாலையும் சாற்றி வழிபாடு செய்து 27 முறை வலம் வருவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஒருவேளை தங்களுக்கு சிவபெருமான்தான் இஷ்ட தெய்வம் என்றால் சிவபெருமானுக்கு வில்வ மாலையையும் அம்பிகைக்கு தாமரைப்பூ மாலையும் சாற்றி 27 முறை வலம் வர வேண்டும். முருகப்பெருமான்தான் இஷ்ட தெய்வம் என்றால் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வள்ளி தெய்வானைக்கு தாமரைப்பூ மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தை நினைத்து சனிக்கிழமை விரதம் இருந்து அந்த தெய்வத்திற்குரிய ஆலயத்திற்கு சென்று ஏதாவது ஒரு ரூபத்தில் தாமரைப் பூவை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதோடு அவர்களுடைய சன்னதியை 27 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு 27 முறை வலம் வரும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை மனதார கூறிக்கொண்டு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் வலம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி யார் ஒருவர் தொடர்ச்சியாக சனிக்கிழமை தோறும் செய்கிறார்களோ அவர்கள் செய்யக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். வாடிக்கையாளர்கள் அவர்களைத் தேடி வருவார்கள். தொழிலில் அபரிவிதமான லாபத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: தன மழை பொழியும் வாராகி மந்திரம்

கடினமாக உழைத்தும் தொழிலில் லாபம் இல்லை என்பவர்களும் தொழிலை நடத்த வழி இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் இந்த சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்