
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களை நாம் அனுபவிக்காமல் நம்மை எதிரிகள் மற்றும் துரோகிகளிடமிருந்து காப்பாற்றவும் கர்ம வினைகளை நீக்கவும் உதவக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக கால பைரவர் திகழ்கிறார். கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த அஷ்டமி திதியில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அன்றைய நாளில் பூசணி தீபம் ஏற்றுவது, தேங்காய் தீபம் ஏற்றுவது என்று பலவிதமான வழிபாட்டு முறைகளை செய்வார்கள். அதே போல் வளர்பிறை அஷ்டமி நாளிலும் நாம் காலபைரவரை வழிபாடு செய்தோம் என்றால் செல்வ செழிப்பிற்கு நமக்கு எந்தவித குறையும் இருக்காது என்றே கூறலாம். வளர்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளோடு அஷ்ட லட்சுமிகளின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இந்த பரிகாரத்தை ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி இரவு 11:30 மணிக்குள் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகு காலம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நேரம். அந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் இரவு 11:30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு மூன்று முக்கியமான பொருட்கள் வேண்டும். அவை வெந்தயம், பச்சை கற்பூரம், கிராம்பு. இவை மூன்றுமே நம்முடைய வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள்தான். இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை நம் பக்கம் ஈர்க்க முடியும். செல்வம் பெருகுவதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும்.
ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப வெந்தயத்தை போட வேண்டும். அந்த வெந்தயத்திற்கு மேல் ஒரு பெரிய துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். அந்த பச்சை கற்பூரத்திற்கு மேல் மொட்டு உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு கிராம்பை வைக்க வேண்டும். இதை அப்படியே நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமான் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். பிறகு சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் காலபைரவரை போற்றி ஓம்” என்னும் மந்திரத்தையோ அல்லது “ஓம் சொர்ண ஆகர்சன பைரவரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தையோ எட்டு முறை மட்டும் முழு மனதோடு கூற வேண்டும். பிறகு இந்த வெந்தயம் வைத்திருக்கக்கூடிய அகல் விளக்கை எடுத்து நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைக்க வேண்டும். இந்த பொருள் அப்படியே நிலை வாசலில் இரவு வரை இருக்கட்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு சிவப்பு நிற துணியில் இவை அனைத்தையும் எடுத்து போட்டு மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாகவோ அல்லது படத்திற்கு பின்பாகவோ வைத்துவிடலாம்.
எப்பொழுதெல்லாம் முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்கிறோமோ எப்பொழுதெல்லாம் பண பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த மூட்டையை நாம் வழிபாடு செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். அனு தினமும் இறைவழிபாட்டில் ஈடுபடும் பொழுது இந்த மூட்டைக்கும் சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் வரை இது அப்படியே இருக்கட்டும் மூன்றாவது மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியில் இதை ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிதாக செய்து வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: ஐஸ்வரியம் பெருக குங்குமப்பூ
முழு மனதோடு வளர்பிறை அஷ்டமி தினத்தில் நாம் செய்யக்கூடிய இந்த ஒரு பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வ தடைகளையும் நீக்குவதோடு அதிக அளவில் செல்வத்தை பெற உதவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.