
அனாவசியமான வீண் விரைய செலவுகள் ஓரளவுக்கு குறைந்து விட்டாலே போதும். கையில் வருமானம் தங்கும். தேவையில்லாத அனாவசிய செலவுகள் மருத்துவ செலவுகள் வீண் விரைய செலவுகள் வீட்டில் ஏற்படக்கூடாது. வீட்டில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைவாக இருக்க வேண்டும். மகாலட்சுமியை எப்படியாவது வசியம் செய்து விட வேண்டும், பண கஷ்டம் இருக்கக் கூடாது என்றால், சுலபமாக நாம் என்ன பரிகாரம் செய்யலாம்.
இதோ செம்பருத்தி பூவை வைத்து செய்யக்கூடிய ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் உங்களுக்காக. இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இருக்கும் செல்வம் சிந்தாமல் சிதறாமல் பாதுகாப்பாக உங்களுடைய வீட்டிலேயே இருக்கும். சுப செலவுகள் மட்டுமே ஏற்படும். பணத்தை வைத்து உருப்படயியாக ஒரு சில விஷயங்களை உங்களுக்காக செய்து கொள்வீர்கள். பணத்தை வைத்து சொத்து சுகம் வாங்கலாம். நகை வாங்கலாம். பிள்ளைகளை படிக்க வைக்கலாம். இப்படி எல்லாம் பணம் செலவானால் மனகஷ்டம் வராது. பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
அனாவசியமாக ஒரு இடத்தில் பணத்தை கொடுத்து ஏமாறுவது, மருத்துவமனையில் கொண்டு போய் பணத்தை கொட்டிக் கொடுப்பது, தேவையே இல்லாத செலவு வந்து பேங்க் பேலன்ஸ் காலி செய்யும். இதையெல்லாம் தடுக்க இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பரிகாரத்தை தவறாமல் செய்து பாருங்கள். எண்ணி 48 நாளில் நல்ல வித்தியாசத்தை உணருவீர்கள்.
ஒன்றுமே இல்லைங்க. உங்களுடைய வீட்டில் ஈசானிய மூளை எது என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி டம்ளர், பீங்கான் டம்ளர் அல்லது பவுல் எது இருந்தாலும் அதில் தண்ணீர் நிரப்பி, அந்த தண்ணீரில் கொஞ்சம் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி போட்டு, அதில் சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூ, ஒன்றை மிதக்க விடுங்கள்.
உங்களுடைய வலது கை சுண்டு விரலை அந்த தண்ணீருக்குள் விட்டுக்கொண்டு, “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ” என்ற மந்திரத்தை மனமுருக 27 முறை சொல்லுங்கள். மறுநாள் அந்த தண்ணீரையும் பூவையும் மாற்றி அந்த ஈசானிய மூலையில் வையுங்கள். 48 நாள் இந்த பரிகாரத்தை செய்தாலே உங்களுடைய வீட்டில் வீண்விரய செலவுகள் குறையும். வருமானம் பெருகும். பணத்திற்கு கஷ்டம் இருக்காது.
இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளைப் போக்கும் பஞ்சமி பரிகாரம்
ஒரு வீட்டின் வடகிழக்கு பகுதியை ஈசானிய மூலை ஆகும். அந்த ஈசானிய மூலை எப்போதுமே சுத்த பத்தமாக வாசனையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நிச்சயம் பண வரவு உண்டாகும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் மேல் சொனையில் ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்