நம்மை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்குரிய நாட்களாக திகழ்வதுதான் ஆஷாட நவராத்திரி வரக்கூடிய ஒன்பது நாட்களும். அதிலும் குறிப்பாக அந்த 9 நாட்களில் வரக்கூடிய பஞ்சமி, அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வழிபாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும். அந்த வகையில் இன்று பஞ்சமி திதி. ஆஷாட நவராத்திரியுடன் சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதி வருகிறது. இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சனைகளைப் போக்கும் பரிகாரம்
வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் சிறப்பான வாழ்க்கை அமையும். வராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி தினத்தன்று இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது வாராகி அம்மனின் அருளால் அவர்களுடைய பிரச்சினைகள் தீரும் என்றே கூறலாம். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு மிகவும் எளிமையான வழிமுறைகள் தான் இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் செய்யலாம். பெரிதாக எந்தவித பூஜை முறைகளோ வழிபாட்டு முறைகளோ இதற்கு கிடையாது.
இன்று மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்துவிடலாம். இந்த பரிகாரத்தை பூஜையறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அசைவம் சாப்பிட்டு இருந்தால், தீட்டு சமயத்தில் இருப்பவர்களாக இருந்தால் வீட்டின் வரவேற்பு அறையில் இதை செய்ய வேண்டும். மற்றவர்கள் பூஜையறையில் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு தட்டு வேண்டும். அந்த தட்டிற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் ஒரு கட்டி கற்பூரத்தை வைக்க வேண்டும். அந்த கற்பூரத்திற்கும் மேலாக கற்பூரவள்ளி இலை ஒன்றை வைக்க வேண்டும்.
இந்த இலையை மாலை 6:00 மணிக்கு முன்பாகவே பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மணிக்கு மேல் பறிக்கக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூரவள்ளி இலைக்கு மேல் மொட்டு உடையாத நல்ல கிராம்பாக ஐந்து கிராம்பை வைக்க வேண்டும். அந்த கிராம்பிற்கு மேல் மறுபடியும் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து விடுங்கள். இந்த கற்பூரத்தை ஏற்றும் பொழுது முடிந்த அளவிற்கு வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க இருந்தால் அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
இப்பொழுது வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்துக்கொண்டு பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும், எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இந்த கற்பூரம் எறிய ஆரம்பித்ததும் இந்த கற்பூரத்தை அப்படியே எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கக் கூடிய ஒவ்வொரு அறைகளிலும் அந்த அறைகளில் இருக்கக்கூடிய மூலைகளிலும் காட்ட வேண்டும். இப்படி காட்டுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்கள் விலகும். வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் இதிலிருந்து வரக்கூடிய வாசனையை நுகர்வதன் மூலம் அவர்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் விலகும். இதனால் நமக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: சுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு
எளிமையான இந்த கற்பூர பரிகாரத்தை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி தினத்தன்று செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இதுவரை அனுபவித்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.